charset ?>"> வணிக செய்திகள்

Category Archives: வணிக செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 385 ரன்கள் எடுத்துள்ளது.

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கிய விவகாரம்; விதிமீறல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல: ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதில் எந்தவித விதிகளையும் மீறவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் வர்த்தகம் நடக்கிறது என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விளக்கம் அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

புதன் இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது விமானச்சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பில்லை என்று ஜெட் ஏர்வேஸ்...

அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க 3,000 செயற்கைக்கோள்களை அனுப்ப அமேசான் திட்டம்

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதற்காக 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்’ என்பது ‘ஃபேர் அண்ட் லவ்லி’-யை இழிவுபடுத்துகிறதா? - கோர்ட் சந்தித்த விநோத வழக்கு

இமாமி நிறுவனத்தின் முகப்பூச்சு கிரீம் தயாரிப்பில் காட்டப்படும் வாசகம் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் என்பது இந்துஸ்தான் யூனிலீவரின் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ யை இழிவுபடுத்தவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

மீண்டும் வட்டியைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி வசூல் இலக்கை எட்டாததால் மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை

நடப்பு நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கை எட்டவில்லை என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறைவு: வர்த்தகத் துறை செயலர் அனுப் வாத்வான் தகவல்

இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையானது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று மத்திய வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சியில் செல்கிறதா? - ரகுராம் ராஜன் ஐயம்

போதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத போது இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறுவது எப்படி என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி சேவையில் வங்கிகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது: ஆர்பிஐ கவர்னர் கருத்து

நாட்டில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதனால் நிதி பரிவர்த்தனையில் வங்கிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து யார்டு சிறையை வாங்கிய இந்தியத் தொழிலதிபர்

உலகின் புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை கேரளாவைச் சேர்ந்த லுலு குழும தொழிலதிபர் யூசுப் அலி வாங்கி தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார்.

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 4 இடங்கள் முன்னேற்றம்

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திவாலாகிறது ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனமான ஏபிஜிஷிப்யார்டு திவாலாகிறது. இந்நிறுவ னத்தை சீரமைப்பது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த லிபர்டி ஹவுஸ் அளித்தபரிந்துரைகளை கடன் அளித்த வங்கிகள் நிராகரித்த நிலையில் திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திவாலாகிறது ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனமான ஏபிஜிஷிப்யார்டு திவாலாகிறது. இந்நிறுவ னத்தை சீரமைப்பது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த லிபர்டி ஹவுஸ் அளித்தபரிந்துரைகளை கடன் அளித்த வங்கிகள் நிராகரித்த நிலையில் திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திவாலாகும் நிலையிலிருந்து மீட்க  ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய பரிந்துரை

விமான சேவை நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து மீட்டு தொடர்ந்து விமான சேவையைத் தொடர்வதற்கு அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடன்தாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்து குழும தலைமை நிதி அதிகாரி நம்பி ராஜனுக்கு விருது

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்து குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) மற்றும் நிறுவன செயலரான நம்பி ராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.