Category Archives: வணிக செய்திகள்

சந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்

ஐசிஐசிஐ வங்கியில் நிகழ்ந்த நிதி விவகாரம் தொடர்பாக வங்கி தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் அஜய் தியாகி கூறினார்.

இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிப்பு:கேப்ஜெமினி ஆய்வு வெளியீடு

இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேப்ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக மக்கள் தொகையுடன் உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருப்பதற்கு ஏற்ப பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அந்த

ஐசிஐசிஐ வங்கிக்கு இடைக்கால நிர்வாகி நியமனம்: விசாரணை முடியும் வரை சாந்தா கொச்சாருக்கு விடுப்பு

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சார் மீதான புகார் குறித்த விசாரணை முடியும் வரை வங்கி பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் கோரப்பட்டுள்ளார். வங்கியை வழிநடத்த இடைக்கால நிர்வாகியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைக்கப்பட மாட்டாது: அருண் ஜேட்லி திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் வருவாயை நம்பியிருக்க வேண்டாம் என்றால் குடிமக்கள் தங்கள் வரிகளை நேர்மையாகச் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

4 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்: வாஷிங்டன் ஆய்வு நிறுவனம் கணிப்பு

முதுகலைப் பட்டம் பெற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று வாஷிங்டனைச் சேர்ந்த கால்டோ அமைப்பு கணித்துள்ளது.

தொழில் ரகசியம்: அவசியமிருந்தால் மட்டுமே மீட்டிங்கிற்கு செல்லவும்!

'மீட்டிங் என்பது மிகவும் தேவையானது, ஒன்றும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டால்’ என்றார் ‘ஜான் கென்னத் கால்ப்ரேய்த்’. நீங்கள் ஆபீசில் நிறைய மீட்டிங்கில் அமர்ந்திருப்பீர்கள்.

வணிக நூலகம்: மேலாளர்களுக்கான திறன்கள்!

ஒரு மேலாளருக்குத் தேவையான அவசியமான திறன்கள் குறித்தும், பேராவலுடன் தங்களது பணியில் திறம்பட செயல்பட விரும்புபவர்களுக்காகவும் புகழ்பெற்ற “ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ” வெளியிட்டுள்ள புத்தகமே “ஹெச்பிஆர் மேனேஜர்ஸ் ஹேண்ட்புக்” என்னும் இந்தப் படைப்பு. மிகச்சிறந்த ம

ஏலத்துக்கு வந்த ருச்சி சோயா நிறுவனம்: ரூ.6,000 கோடிக்கு அதானி வில்மார் விண்ணப்பம்

அதானி வில்மார் நிறுவனம் ரூ.6,000 கோடி அளித்து ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க உள்ளது. இதன் மூலம் ருச்சி சோயா நிறுவனத்தை கையகப்படுத்தும் ஏலத்தில் பதஞ்சலி நிறுவனம் விலகுகிறது. அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மார் குழுமமும் இணைந்து கூட்டு...

லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற இன்ஃபோசிஸ் முடிவு

லண்டன் மற்றும் பாரீஸ் பங்குச்சந்தைகளில் இருந்து வெளி யேற இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்த இரு பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறலாம் என்னும் எண்ணத்தை நிறுவனம் வெளிப்படுத்தியது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பரிவர்த்

ஜியோவின் அதிரடி ஆஃபர்: ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ‘திகைப்பூட்டும் சலுகை’

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு ரொக்க கையிருப்பு 2 மடங்கு அதிகரிப்பு

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின் போது 8.9 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.19.3 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. மக்களின் ரொக்க கையிருப்பும் 2...

கடந்த ஆண்டில் 19 அரசு வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரம் கோடி நஷ்டம்; லாபம் ஈட்டிய 2 வங்கிகள்: எஸ்பிஐக்கும் நஷ்டம்

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் 21 அரசு வங்கிகளில் 2 வங்கிகளைத் தவிர 19 வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 357 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

2017-18-ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்வு

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு (எப்டிஐ) 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசு

இந்திய இளம் தொழில்முனைவோர் குழு கண்டறிந்த, பெண்கள் பாதுகாப்புக் கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. உடலில் அணிந்துகொள்ளும் வகையிலான இந்தக் கருவியின் மூலம் தங்களை யாராவது அச்சுறுத்தினாலோ அல்லது தாக்கினாலோ அது குறித்த தகவல்களை பெண்கள் அவச

ஆர்.எஸ்.எஸ். குறித்து கிண்டல்: பெண்களை அரை கால் சட்டையில் பார்க்க விரும்புகிறாரா? ராகுல் காந்திக்கு, பா.ஜனதா பதிலடி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்