Category Archives: இந்தியா செய்திகள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளருமான பிரியங்கா சதுர்வேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக வெளியேறும் நேரம் வந்துள்ளது: மாயாவதி பேச்சு

வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக, ஆட்சியை விட்டு வெளியேறும் நாள் வந்துவிட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

வயநாட்டில் போட்டியிட்டு அமேதி மக்களை ராகுல் இழிவுபடுத்திவிட்டார்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

தேர்தலில் இரண்டாவது தொகுதியாக வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம், அமேதி மக்களை ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்தின் போது நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி வங்கி வாசலில் கியூவில் நின்றனரா?- ராகுல் காந்தி

பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் தங்கள் பணத்துக்காக வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானியா நின்றனர் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி மீது தன் விமர்சனத்தைத் தொடர்ந்தார்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ரத்து; 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தொண்டர்கள் முன் பிரதமர் மோடியை ஆதரித்து பேசியதால் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு நெருக்கடி

உ.பி.யின் அலிகரில் பாஜக தொண்டர்கள் முன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அப்பதவியில் அமர வேண்டும் என ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங்(87) பேசியிருந்தார்.

ஒப்புகைச் சீட்டு நடைமுறை: தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்- உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல்படுத்தினால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பேப்பர் கப்பில் 'நானும் காவலாளி' விளம்பரம்: அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே துறை

சதாப்தி ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பையில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசரஅவசரமாக அந்த கோப்பைகளை ரயில்வே வாபஸ் பெற்றது.

மோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி

பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

‘மிஷன் சக்தி’: பிரதமர் மோடியின் உரை தேர்தல் விதிமீறலா? - ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மிஷன் சக்தி திட்டம் வெற்றி பற்றி பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறலா என்று ஆராய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2019: ஜெயப்பிரதா, மேனகா காந்தி, வருண் காந்தி போட்டி - உ.பி. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரபிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

''இரு சிறுமிகளைக் கடத்தி மதமாற்றம் பண்ணியிருக்காங்க; நீங்க ஏன் சார் டென்ஷன் ஆகறீங்க'': பாக்.அமைச்சரை வெளுத்துவாங்கிய சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இரு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சுஷ்மா அறிக்கை கேட்டது தொடர்பாக பெரும் வார்த்தைப் போரே நடந்தது.

பாஜகவை வீழ்த்தும் நோக்கம்: கூட்டணிக் கட்சிகளுக்காக இடங்களை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் வியூகம் கைகொடுக்குமா?

பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்காக இடங்களை விட்டுக்கொடுத்து, வலுவான கூட்டணியை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது.

தெலங்கானா, உ.பி., கேரளா, மேற்கு வங்கம்; 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக: பெங்காலில் முஸ்லிம் பெண் வேட்பாளர்

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் நான்காவது பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளருக்கும் சீட் தரப்பட்டுள்ளது.

'நானும் காவலாளிதான் கோஷத்தை பயன்படுத்தாதீர்கள்': பிரதமர் மோடியை கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமையும் என்று பாஜஎம்.பி. சத்ருஹன் சின்ஹா பிரதமர் மோடியை கிண்டலுடன் விமர்சித்துள்ளார்

'தாமரை' மலர்கிறது; தடுக்கும் மம்தா: வாக்குகளை இழக்கும் காங்., இடதுசாரிகள்- மே.வங்கம் ஓர் அலசல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தேசத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர்.

தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு 'படுமோசம்': கேரளா, ராஜஸ்தான், குஜராத் எம்.பி.க்கள் 'சூப்பர்': ஆய்வில் தகவல்

16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்த மக்கள், தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்கவில்லை, மிகமோசம் என்று வாக்களித்துள்ளனர்.

கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.