Category Archives: இந்தியா செய்திகள்

‘பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள்’: கேரள முதல்வரை நெகிழச் செய்த மீனவர்கள்

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்த நிலையில், அதை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

கேரள துயரத்தைச் சாதகமாக்கி பணம் குவிக்கப் முயன்ற திருச்சி நபர்: நன்கொடைக்கு தன் வங்கிக் கணக்கை அளித்துப் பித்தலாட்டம்

திருவனந்தபுரம் சரகம் தலைமை ஆய்வாளர் மனோஜ் ஆப்ரகாம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க பாரத ஸ்டேட் வங்கி இவரது கணக்கை முடக்கியுள்ளது.

உதவிக்காக கதறிய கேரள எம்எல்ஏக்கள்; விரைவில் வராவிட்டால் 10 ஆயிரம் உடல்கள் மிதக்கும்: டிவியில் உருக்கம்

கேரளாவில் பருவமழை மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், செங்கனூர், அங்கமாலி தொகுதி எம்எல்ஏவும் தங்கள் பகுதி மக்களைக் காக்க கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் அனைவரின் மனதையும் உருக்குவதாக அமைந்துள்ளது.

மழை கோரதாண்டவம்: கேரளாவில் ஒரேநாளில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: உயிரிழப்பு 164 பேராக அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் கோரத் தாண்டவமாடிய மழையால், நேற்று ஒரேநாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது.

சுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி

நாட்டின் 72-வது சுதந்திரதினத்தனமான இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டிப் பேசினார்.

கேரள மழை, வெள்ளம்: கோழிக்கோடில் வெறிச்சோடிய கிராமம்

கேரளாவில் வரலாறு காணாத மழையினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து கோழிக்கோட்டில் உள்ள கண்ணப்பன்குன்டு கிராமத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.

“60 வயதுக்கு மேலாகியும், மீண்டும் குழந்தையைப்போல் உணர்கிறேன்”: உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோஸப் பேச்சு

60 வயதுக்கு மேல் ஆகியும், மீண்டும் குழந்தையைப் போல் உணர்கிறேன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற நீதிபதி கே.எம். ஜோஸப் தெரிவித்துள்ளார்.

கேரள மழை: துயரத்திலும் நம்பிக்கை; நிவாரண முகாம்களின் மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், சிறப்பு வகுப்புகள்- கேரளாவில் அசத்தல்

மாத இறுதியில் ஓணம் பண்டிகையின் போது தேர்வுகள் நடைபெறும் என்பதால் பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்

ஐஎஸ்ஐ பெறாத ஹெல்மெட் விற்பது குற்றம்: 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம்; சட்டம் கொண்டு வர முடிவு

ஐஎஸ்ஐ எனப்படும் இந்தியதர அங்கீகார நிறுவனம் அல்லாத ஹெல்மெட் விற்பது குற்றம் எனக் கருதப்பட உள்ளது. இதற்கான தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: எளிதில் வென்றது பாஜக கூட்டணி; பறிகொடுத்தது காங்கிரஸ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் 105 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பறிகொடுத்தது.

தேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்

தேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் வகையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பெரும் பங்கு வகித்துள்ளார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவற்றில் சில...

கொலீஜியம் மத்திய அரசு மோதல் தொடர்கிறதா?- நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டியை குறைத்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி

உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவருமான நீதிபதி ஜோஸப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதாக மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் மழைக்காலக் எஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்த மசோதா நடப்பு மழைக்காலக் கூட்டத்தொ டரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

உள்நாட்டுப் போர் ஏற்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா?- மம்தா பானர்ஜி ஆவேசம்

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை”: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை.

ரபேல் விமானம்: 56 இஞ்ச் மார்புக்காரரின் நண்பருக்கு ரூ.ஒருலட்சம் கோடி மக்கள் வரியாகச் செலுத்துவார்கள்-ராகுல் கடும் தாக்கு

36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை: வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் மாரடைப்பால் உயிரிழந்தது

டெல்லியில் புராரி பகுதியில் கடந்த 1-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில், அவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயும் நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது.

''தேவையற்ற அணைப்பு; தேவையற்ற தீர்மானம்''- உ.பி. பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி கண்டனம்

''நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்களை நாங்கள் கேட்டோம். ஆனால், அவர்கள் அதற்குரிய பதிலைக் கொடுக்கத் தவறியதால் தேவையற்ற அணைப்பை மட்டுமே அவர்களால் தர முடிந்தது'' என்று மோடி பேசினார்.

'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் என்று நினைத்தாரா?: பிரதமரைக் கட்டிப் பிடித்த ராகுல் காந்திக்கு ஹர்சிம்ரத் கவுர் கண்டனம்

மக்களவையில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயலை தான் விரும்பவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்

பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது.