Category Archives: இந்தியா செய்திகள்

கோடீஸ்வரர் பிரதமர் மோடி: சொந்தமாக கார், பைக் இல்லை; சொத்துவிவரங்கள் பிரதமர் அலுவலகம் வெளியீடு

பிரதமர் மோடிக்கு ரூ.2 கோடிக்கு சொத்துக்கள் இருந்தும், சொந்தமாக கார் இல்லை என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விலைவாசியைக் குறையுங்கள்; பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் இல்லை: மோடிக்கு எச்சரிக்கை விடுத்த பாபா ராம்தேவ்

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால், தேர்தலில் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் எச்சரித்துள்ளார்.

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தார் பிரதமர் மோடி: ‘தூய்மையே உண்மையான சேவை’ திட்டம் தொடக்கம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மையே உண்மையான சேவை திட்டத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தார்.

‘‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் பிரதமர் மோடி; ஆனால் என் மகளுக்கு...’’ - பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்

பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.

நாட்டை விட்டுக் கிளம்பும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன்: விஜய் மல்லையா; அரசிடம் விளக்கம் கேட்கும் காங்கிரஸ்

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 7 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் நடத்தையை இழிவுபடுத்திய எம்எல்ஏ: தேசிய மகளிர் ஆணையம் கொதிப்பு

கேரளாவில் பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கன்னியாஸ்திரியின் நடத்தையை மிகமோசமாக இழிவுபடுத்திப் பேசிய எம்எல்ஏ பி.சி.ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமித் ஷா பதவிக்காலம் நீட்டிப்பு: பாஜக செயற்குழு ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது: ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ்

தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் வகையில், தெலங்கானா சட்டப்பேரவையை கலைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றிய, முதல்வர் சந்திரசேகர் ராவ், அதை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்.

குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது

22 ஆண்டுகளுக்கு முந்தைய போதை மருந்து வழக்கில் முன்னாள் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குஜராத் காவல்துறை சிஐடி பிரிவு கைது செய்துள்ளது.

பிரதமர் மோடி வெளிநாடு பயணத்தின்போது உடன் சென்ற அரசு சாராத தனிமனிதர்கள் யார்?- மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் கேள்வி

பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோது, அவருடன் பயணித்த அரசு சாராத தனிமனிதர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவர் ஒழுக்கமாக இருந்தால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார்: எதிர்க்கட்சிகளை சாடிய மோடி

இன்றைய சூழலில் அரசியலில் ஒருவர் ஒழுக்கமாக நடந்து கொண்டால், அவர் சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்படுகிறார் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மறைமுகமாகச் சாடினார்.

பிரதமர் மோடி படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்க வேண்டும்: மறுத்தால் சப்ளை கட்- புதிய கெடுபிடியால் பங்க் உரிமையாளர்கள் கலக்கம்

பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பைப் பரப்பி, நாட்டைப் பிளவுபடுத்துகின்றன’: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சொந்த நாட்டு மக்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்பி நாட்டைப் பிளவுபடுத்துகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

‘என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை; ஒவ்வொரு பைசாவும் ஏழைகளைச் சென்றடையும்’: பிரதமர் மோடி உறுதி

என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. மத்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஏழை மக்களைச் சென்றடையும். 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் சொந்த வீடு கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மழை, வெள்ளத்தால் தவிக்கும் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி: உதவிக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்

பலத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்

100 ரூபாய் வருவாய் ஈட்ட 111ரூபாய் செலவிடும் ரயில்வே துறை: நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் திணறல்

இந்திய ரயில்வே துறையின் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் 100 ரூபாய் ஈட்டுவதற்காக 111 ரூபாய் செலவு செய்து வருவது தெரியவந்துள்ளது.

‘பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள்’: கேரள முதல்வரை நெகிழச் செய்த மீனவர்கள்

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்த நிலையில், அதை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

கேரள துயரத்தைச் சாதகமாக்கி பணம் குவிக்கப் முயன்ற திருச்சி நபர்: நன்கொடைக்கு தன் வங்கிக் கணக்கை அளித்துப் பித்தலாட்டம்

திருவனந்தபுரம் சரகம் தலைமை ஆய்வாளர் மனோஜ் ஆப்ரகாம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க பாரத ஸ்டேட் வங்கி இவரது கணக்கை முடக்கியுள்ளது.

உதவிக்காக கதறிய கேரள எம்எல்ஏக்கள்; விரைவில் வராவிட்டால் 10 ஆயிரம் உடல்கள் மிதக்கும்: டிவியில் உருக்கம்

கேரளாவில் பருவமழை மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், செங்கனூர், அங்கமாலி தொகுதி எம்எல்ஏவும் தங்கள் பகுதி மக்களைக் காக்க கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் அனைவரின் மனதையும் உருக்குவதாக அமைந்துள்ளது.