Category Archives: இந்தியா செய்திகள்

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்படவில்லை: அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்படவில்லை, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் அசல் ஆவணங்களின் போட்டோ காப்பிகளையே பயன்படுத்தினர்

மக்களவைத் தேர்தல் தேதி: ஏற்பாடுகள் முடிந்தது; ஓரிரு நாட்களில் அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலை விபத்து என விமர்சித்த உ.பி. அமைச்சர்: வீடியோவை ரீட்வீட் செய்த திக்விஜய் சிங்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் விபத்து என விமர்சித்து உ.பி. அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக். பற்றி நினைப்பு- கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறிய பிரதமர் மோடி: குழப்பத்தில் பாஜக தொண்டர்கள்

குஜராத்தின் ஜாம்நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சி நகரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை மறந்தவாறு குறிப்பிட்டார்..

புல்வாமா வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறார் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பிரபலப் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தாய் நாடு திரும்பினார் அபிநந்தன்: வாகா எல்லையில் ஒப்படைப்பு - எல்லையில் கொண்டாட்டம்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா வசம் ஒப்படைத்தனர். ஏராளமான ன மக்கள் எல்லையில் திரண்டு அபிநந்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

காஷ்மீர்: கல்லெறிபவர்கள் சுதந்திரமாக விடப்படுகின்றனர், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ஆயுதப்படையினர் மீது வழக்கா?

போலீஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது ஆனால் தற்காப்பு உத்தியைக் கையாளும் ஆயுதப்படையினர் மீது வழக்கு தொடர்வதா என்ற கேள்வி எழுப்பிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

5 ஆண்டுகள் ஆட்சியில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் வேலையில்லாமல் இளைஞர்கள் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலை. 14 மாணவர்கள் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ்: ஆதாரங்கள் இன்மையால் உ.பி.போலீஸ் நடவடிக்கை

அலிகார் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடந்த ஆர்பாட்டங்கள் தொடர்பாக 14 மாணவர்கள் மீது சாற்றப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகளை உத்தரப் பிரதேச போலீஸார் வாபஸ் பெற்றனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோடி தலைமை பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் விலைகள் 2.86% குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தம்: உ.பி.சட்டப்பேரவையில் கடும் அமளி

லக்னோவில் இருந்து அலகாபாத் செல்ல முயன்ற சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம் நீக்கம், வங்கி உத்தரவாதம் இல்லை, கணக்குகளை ஆய்வு செய்ய முடியாது

7.87 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல், வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மீண்டும் சபரிமலைக்குச் செல்லும் பிந்து, கனகதுர்கா: பிப்.12-ம் தேதி ஐயப்பனைத் தரிசிக்க திட்டம்

ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களில் ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய முடிந்தால் காங்கிரஸால் ஏழைகளுக்கு வருமானத்தை அளிக்க முடியும்: ராகுல் உறுதி

பாஜகவால் 15 தொழிலதிபர்களின் ரூ.3,50,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரஸால் ஒவ்வோர் ஏழையின் வங்கிக் கணக்குக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி; மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்': பாஜக கட்சி தலைவர் விஜய் வர்ஜியா ஆவேசம்

சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. உடனடியாக மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா வலியுறுத்தியுள்ளார்.

என் வாழ்க்கையையே இழக்கத் தயாராக உள்ளேன்; சமரசத்துக்கு இடமில்லை- மம்தா பானர்ஜி ஆவேசம்

என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று பாஜகவுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

'வேளாண்கடன் தள்ளுபடியை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறார்கள்': காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்

விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் கடன் தள்ளுபடியை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் ஷுக்லா நியமனம்

மத்தியப் பிரதேச முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ் அதிகாரியுமான ரிஷிகுமார் ஷுக்லா சிபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 30 பேர் கொண்ட பட்டியலிலிருந்து பிரதமர் தலைமையிலான கமிட்டி ஷுக்லாவைத் தேர்வு செய்துள்ளது.

‘‘பிரதமர் மோடி 15 பணக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குகிறார்’’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி 15 பணக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குகிறார், நாங்கள் ஏழைகளுக்கு குறைபட்ச பலன்களை உறுதி செய்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.