Category Archives: இந்தியா செய்திகள்

‘எமர்ஜென்சியைவிட இப்போது சூழல் மோசமாக இருக்கிறது’: பாஜகவை விளாசிய யஷ்வந்த் சின்ஹா

கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியைக் காட்டிலும் நாட்டில் இப்போது பாஜக ஆட்சியில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜேட்லி: நெருக்கடிநிலையின் போது கைதி ஒருவருக்கு உணவுக்காக ரூ.3 மட்டுமே ஒதுக்கிய அவலம்

1975-ல் உலகை உலுக்கிய இந்திய எமெர்ஜன்சி ‘அடக்குமுறை’ அமல்படுத்தலை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன் முகநூல் பதிவில் இந்திரா காந்தியையும் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அருண் ஜேட்லியின் கருத்து அபத்தமானது: ப.சிதம்பரம் காட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவானவர் என்று அருண் ஜேட்லி கூறியது அபத்தமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூரில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்த மக்கள் இரு முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் கண் முன்னே அடித்து இழுத்துச் சென்றனர். இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து, நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாரத்மைக்காக உபி. போலீஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்

காஷ்மீரில் நீண்டகாலம் கவர்னர் ஆட்சி? - ஒமர் அப்துல்லா கண்டனம்; உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம், உடனடியாக புதிய அரசு அமைய வாய்ப்பில்லை’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தலைவர் கவிந்தர் குப்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டசப

பதவி விலகினார் முதல்வர் மெஹபூபா: ‘பாஜகவுடன் ஒவ்வொரு நாளும் பிரச்சினை தான்’ - பிடிபி குற்றச்சாட்டு

ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், அடுத்த திருப்பமாக, முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளிலும் எழுதலாம் என்று சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

‘தலைநகருக்கே இந்த கதி; மற்ற மாநிலங்கள் என்னாகும்?’- கேஜ்ரிவாலைப் பார்க்கச் சென்ற 4 முதல்வர்கள் ஆவேசம்

டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 7-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்கச் சென்ற 4 மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் வரை பதவிக்கு ஆபத்து இல்லை: கர்நாடக முதல்வர் குமாரசாமி

‘‘மக்களவை தேர்தல் வரை என்னை யாரும் தொட்டு பார்க்க முடியாது. பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது’’ என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

‘வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வோம்’: பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஅரசு முன்வராவிட்டால், அடுத்த வாரத்தில் இருந்து டெல்லியில் மக்களைத் தேடிச்சென்று வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்து, கையெழுத்து வாங்குவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; பிஎஸ்எப் வீரர்கள் 4 பேர் பலி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் 4 பிஎஸ்எப் வீரர்கள் பலியாயினர். மேலும் 3 வீரர்கள் காயமடைந் தனர்.

குருவுக்காக பெருவிரல் கொடுத்தான் ஏகலைவன்; இன்று குருவையே ‘வெட்டிவிட்டார்’ மோடி: ராகுல் காந்தி கிண்டல்

குரு கேட்டதற்காக அன்று ஏகலைவன் தன் பெருவிரலை வெட்டிக்கொடுத்தான், ஆன்ல், இன்று பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன் தனது (அத்வானி) குருவையே வெட்டுவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால் என் மீது வழக்குகள் போடட்டும்: ராகுல் காந்தி சவால்

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால், என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதைச் சந்திக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி அரசை முடக்கும் மோடி அலுவலகம்; அமித் ஷா உத்தரவுப்படியே சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை முடக்கும் விதமாக, துணை நிலை ஆளுநர், ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை ஆகியோரைச் சுதந்திரமாகச் செயல்பட பிரதமர் மோடியின் அலுவலகம் திறந்து விடப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பகிர

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல்(1.90 லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம் சுமை விழும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு மாடு விற்று பல லட்சம் ஈட்டும் கர்நாடகா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மவுசு அதிகரித்து வரும்நிலையில் கர்நாடகாவில் அதிகஅளவு ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு தமிழகத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறன.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பூட்டிய அறையில் ஊழியரின் பிணம்: போலீஸார் சந்தேகம்

புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பு ஒன்றில் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணியாற்றி வந்த ஊழியரின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

‘‘சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மை பாதிப்புக்குள்ளாகும்’’ - ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு

சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படும் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.