Category Archives: இந்தியா செய்திகள்

காதலித்த இளைஞர் திருமணம் செய்ய மறுப்பு: துப்பாக்கி முனையில் கடத்திய பெண் வீட்டார்

பிஹார் மாநிலத்தில் ஒராண்டாக காதலித்து பின்னர் திருமணம் செய்ய மறுத்த இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நலன்தான் முக்கியம்; தொழிற்சாலைகள் அல்ல: மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

காற்று மாசுபாட்டால் நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொழிற்சாலைகளைக் காட்டிலும் மக்கள் நலன்தான் முக்கியம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

விவசாயிகளுக்காக எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன: பிரதமர் மோடி தாக்கு

நாட்டில் விவசாயிகளுக்காக எதிர்க்கட்சிகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. விவசாயிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களும், நீர்ப்பாசனத் திட்டங்களும் ஏன் அவர்கள் ஆட்சியில் செயல்படுத்தவில்லை என்று பிரமதர் மோடி கேள்வி எழுப்பி கடுமையாகப் பேசினார்.

நீரவ் மோடியிடம் நகை வாங்கியதால் சிக்கல்: வருமான வரி வளையத்திற்குள் 50 கோடீஸ்வரர்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் கடையில் நகை வாங்கிய 50 கோடீஸ்வரர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது

திருடிச்சென்ற நகைகளை மன்னிப்புக் கடிதத்தோடு திருப்பி வைத்துவிட்டுச் சென்ற திருடன்

தங்கத்தைத் திருடிச் சென்ற திருடன் இரண்டுநாட்களில் கொண்டு வந்து அதே இடத்தில் வைத்துவிட்டு மன்னிப்பு கடிதத்தையும்உடன் எழுதிவைத்துவிட்டுச் சென்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

”உங்கள் பாஸ்போர்ட்டை சரி பார்க்க என்னை கட்டி பிடியுங்கள்” பெண்ணிடம் கேட்ட போலீஸ் அதிகாரி

ஏழை பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேள்விக்குறியாகிறது. காஜியாபாத் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் போலீஸ் அதிகாரியின் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.

நிதி அதிகாரத்தின் மூலமே பெண்கள் சமூக தீமைக்கு எதிராக போராட முடியும்: பிரதமர் மோடி உறுதி

நிதி அதிகாரம் கொண்ட பெண்களால் மட்டுமே சமூக தீமைகளுக்கு எதிராக போராட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தன்பாலின உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது மத்திய அரசு

தன்பாலின உறவு குற்றமா இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடமே விட்டு விடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வைரம் பட்டைத்தீட்டும் தொழிலா? தற்கொலைகளை உற்பத்தி செய்யும் ஆலையா?: சூரத் தொழிலாளர்களின் துயரக்கதை

நியூயார்க் முதல் ஹாங்காங் வரை ஆடம்பர நகைக்கடைகளை அலங்கரிப்பதற்காக வைரக்கற்களை நறுக்கி மெருகேற்றும் அன்றைய 10 மணி நேர கொடூரமான பணி முடிந்த பிறகு சூரத்தைச் சேர்ந்த விக்ரம் ராவ்ஜிபாய் என்பவர் தனது குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியே செல்லக் காத்திருந்து....

அனாதைகளாக மாறும் முதியோர்கள்: நான்கில் ஒருவர் தனிமையில் வாழ்வதாக அதிர்ச்சித் தகவல்

தேசத்தின் மக்கள் தொகை 100 கோடிக்கு மேல் கடந்துவிட்டநிலையில், முதியோர் நிலை குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நான்கில் ஒருவர் தனிமையில் வாழ்கிறார்கள், ஆதரவின்றி தவிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை விற்ற ராஞ்சி காப்பகத்தில் 280 குழந்தைகள் பிறப்புக்கு ஆவணங்கள் இல்லை.

குழந்தையை விற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ராஞ்சி நிர்மல் இருதய காப்பகத்தில், 280 குழந்தைகளின் பிறப்புக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஜீ, நீட் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

ஜீ நுழைவுத் தேர்வும், நீட் நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது

குழந்தைகளை விற்ற 2 கன்னியாஸ்திரிகள் கைது - மிஷனரீஸ் ஆப் சேரிட்டி

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், பச்சிளம் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஒரு லட்சம் வரை பணம் வாங்கப்படுவதாக புகார்

தீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல்: டெல்லி அரசின் உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுப்பு; நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி சாடல்

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்தநாளில், இடமாற்றம் தொடர்பான உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

டெல்லி அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

'மற்ற மாநிலங்களைப் போல டெல்லிக்கு முழு அதிகாரம் இல்லையென்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும்.

காஷ்மீரில் திடீர் திருப்பம்: மெகபூபாவுக்கு எதிராக அணி திரளும் மஜக எம்எல்ஏக்கள்- புதிய அரசு அமைக்க முயற்சி?

காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நீரவ் மோடிக்கு எதிராக பிடி இறுகுகிறது: ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது சகோதரர் மற்றும் அவரது நிறுவன தலைமை நிர்வாகி ஆகியோருக்கு எதிராக இன்டர்போல், தேடப்படும் குற்றவாளியாக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

‘சுவிஸ் வங்கியில் கறுப்புப்பணமே இல்லையா?, வெள்ளையாக மாறிவிட்டதா?’: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள அனைத்து கறுப்புப்பணத்தையும் மீட்பேன் என்று உறுதியளித்த பிரதமர் மோடி அரசு, இன்று கறுப்புப்பணம் இல்லை என்று நிலையைமாற்றிக் கூறுவது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள

இதுதான் நம்ம ராணுவம்.. : எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு புது உடைகள், ஸ்வீட் கொடுத்து அனுப்பி நெகிழ்ச்சி

பாகிஸ்தான் எல்லையில் இருந்து, வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 11-வயது சிறுவனுக்கு புதுஉடைகள், இனிப்புகள் கொடுத்து மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.