Category Archives: இந்தியா செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

ஐஏஎஸ் தேர்வில் அனுமதிக்காததால் இளைஞர் தற்கொலை: ‘தாமதமாக வந்தது குறைதான், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்’: கண்ணீர் கடிதம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தாமதமாக வந்த இளைஞர் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள்: உண்மையான கேள்வியை மோடியால் எதிர்கொள்ள முடியுமா?: ராகுல் சவால்

முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும் பேசும் மோடியால், உண்மையான கேள்வியை எதிர்கொள்ள முடியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

2 நாட்கள் ஆளுநர்கள் மாநாடு: டெல்லியில் நாளை தொடக்கம்

டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்களின் 2 நாள் மாநாடு நாளை (2.6.2018) தொடங்குகிறது. இதில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் டெல்லி சென்றார்.

நகரங்களைத் திணறவைத்த விவசாயிகள்: 2-வது நாள் போராட்டத்தால், காய்கறிகள், பழம், பால் விலை எகிறியது

பயிர் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை, எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் 2-வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினார்கள்.

சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சிம்லா காவல்துறை எச்சரிக்கை

கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சிம்லாவில் சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நகர காவல்துறை எச்சரித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 21 அரசுடைமை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

கடந்த ஆண்டில் 21 அரசு வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து: தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா எச்சரிக்கை

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சுயநலத்துக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பவுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் மனுவை அடுத்து தேசிய...

'கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' - மோடி அரசைக் கிண்டல் செய்த அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் தன்னுடைய ஆட்சி மக்களுக்குச் செய்த நன்மைகளைக் குறிப்பிட்டும் மத்தியில் மோடியின் ஆட்சி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலால் சித்தரிக்கப்பட்ட ஒரு கேலிச்சித்திரம் பரபரப்பாகியுள்ளது

‘பெட்ரோல் விலையில் ரூ.25 வரை குறைக்க முடியும்; மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் சாடல்

பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும், ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யமாட்டார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

தேசிய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டகாரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக

கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு : களத்தில் குதித்த ராம்ஜெத் மலானி

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்..

சர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதுபோன்ற அச்சம் நிலவுகிறது, பாகிஸ்தானைப் போல் சூழல் இருக்கிறது, அரசியல் சாசன அமைப்புகள் எல்லாம் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எடியூரப்பா, குமாரசாமி கடிதம் : தனிப்பெரும் கட்சியாக பாஜக அபார வெற்றி

கர்நாடகாவில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக தரப் பில் எடியூரப்பாவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

நாட்டில் உள்ள சிறைகளில் அதிக அளவில் கைதிகள் உள்ளதால் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் 1,382 சிறைகள் உள்ளன. இதில் அளவுக்கு அதிகமாக, 150 சதவீதம் வரை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைகளில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என்றும் இந்தப் பிரச்சினைக்கு

தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவு: முடிவு தேவகவுடா கையில்

கர்நாடக மாநிலத்தில் நடந்து முந்த 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆதாருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்ற அரசியல்

ஆதார் அட்டைக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்