Category Archives: விளையாட்டு செய்திகள்

‘கொடூரமானது 2 புதிய பந்து முறை’: சச்சின் கருத்துக்கு விராட் கோலி ஆதரவு

ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை என்பது பந்துவீச்சாளர்களுக்கு கொடூரமானது, அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் முறை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு

ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்த பிறகு ஸ்டேடியத்திலிருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பானிய ரசிகர்கள்

உலகக்கோப்பைக் கால்பந்தில் நேற்று ஜப்பான் அணி கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன் முதலாக உலகக்கோப்பையில் தென் அமெரிக்க அணியை வீழ்த்திய ஆசிய அணி என்ற பெருமையைத் தட்டி சென்றதோடு, உலகிலேயே சுத்தம், சுகாதாரத்திலும் தாங்களே சிறந்தவர்கள் என்று...

அணித் தேர்வு செய்தபின்தான் ‘யோ யோ’ டெஸ்ட் நடத்துவதா?- சாம்ஸன், ராயுடு,ஷமி திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார்களா? -எழும் புதிய சர்ச்சை

முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட யோ யோ, டெக்ஸா சோதனையால்தான், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போயுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

வரலாறு படைத்த அயர்லாந்து-ஸ்காட்லாந்து டி20 சர்வதேசப் போட்டி

நெதர்லாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 சர்வதேச போட்டியில் நேற்று ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் புதிய டி20 வரலாறு நிகழ்ந்தது.

திடீர் திருப்பம்: இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் மீது ‘பால் டேம்பரிங்’ குற்றச்சாட்டு; தடைவிதிக்கப்படுமா?

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மீது பந்தை சேதப்படுத்தியதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

'மின்னல்' ரொனால்டோ அசத்தல் ஹாட்ரிக்; ஸ்பெயினுக்கு வெற்றியை மறுத்தார்; உலகக்கோப்பை ஆரம்பத்திலேயே ஓர் இறுதிப் போட்டி!

உலகக்கோப்பையின் ஆரம்பத்திலேயே ஒரு இறுதிப் போட்டியைக் கண்டது போன்ற த்ரில் போட்டி நேற்று போர்ச்சுக்கல் ஸ்பெயின் இடையே நடைபெற்றது, இதில் போர்ச்சுக்கல் நாயகன் மின்னல் ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை புரிந்தார், ஆனாலும் ஸ்பெயின் விடாப்பிடியாக விளையாடி 3-2 என்று முன்னி

உமேஷ் யாதவ் 100 டெஸ்ட் விக்கெட்டுகள்; கபில், கும்ப்ளேவுடன் இணைந்தார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை உமேஷ் யாதவ் ஆப்கானுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட்டில் எட்டினார். இதே மைல்கல்லை எட்டிய 8வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் உமேஷ் யாதவ்.

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம் கண்டு ஷிகர் தவண் சாதனை:ஆப்கானுக்கு இந்தியா விளாசல்

ஆப்கானுக்கு எதிரான வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் ஷிகர் தவண் சதம் அடித்து (104 நாட் அவுட்) சாதனை புரிந்துள்ளார்.

36 வயதினிலே....பின்னால் இறங்குவது புதைமணல் போல்தான்: தோனி கருத்து

36 வயதாகிவிட்டதால் தன் பேட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி கொஞ்சம் முன்னால் களமிறங்கி ஆக்ரோஷமாக ஆட வேண்டிய தேவை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

என் மகள்தான் என்னை மனிதனாக மாற்றினாள்: தோனி நெகிழ்ச்சி

கிரிக்கெட் வீரராக மட்டுமே இருந்த என்னை, என் மகள் ஜிவாதான் முழு மனிதராக மாற்றி இருக்கிறாள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பொருத்தமற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஆன்டர்ஸன் சாடல்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பொருத்தமற்றதாக, கேலிக்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் கடுமையாகச் சாடியுள்ளார்

இங்கிலாந்து அணியிடம் பிரமிக்கும் அம்சம் எதுவுமில்லை; இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல முடியும்: இயன் சாப்பல் உறுதி

பேட்டிங்கில் நிலையற்ற தன்மையுடன், தடுமாறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே-யால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது கோப்பையைக் கொண்டு வர முடியும்: வெற்றி விழாவில் தோனி பேசியது

2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை சென்னையில் கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

தடகள வீரர்கள் 33% வருமானத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்: ஹரியாணா அரசின் அதிரடி உத்தரவால் சர்ச்சை

தடக வீரர்கள் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என ஹரியாணா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்தரவுக்கு வீரர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் நண்பனை இழந்தேன்; ஓராண்டாக வீட்டுக்குச் செல்லவில்லை: ஆப்கான் நட்சத்திரம் ரஷீத் கான் உருக்கம்

நம்பர் 1 டி20 பவுலரான ஆப்கான் கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான், டெஸ்ட் கிரிக்கெட், ஆப்கான் குண்டு வெடிப்புகள், நண்பனை இழந்தது என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

எதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்

தனது அதிரடியான ஷாட்கள் மூலமும், சிக்ஸர்கள் மூலமும் எதிரணிகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தியவர் தோனி என்று கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் முதன்முதலில் தடம் பதித்த நேபாள வீரர்: விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை

நேபாளத்தைச் சேர்ந்த 17வயது இளம் வீரர் முதன் முதலில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று, விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி 4-வது வெற்றி கோவாவுக்கு அதிர்ச்சி அளித்தது

4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவாவும், எப்.சி. புனே சிட்டியும் மோதின.