Category Archives: விளையாட்டு செய்திகள்

தோனி ஒரு மிகப்பெரிய வீரர்தான், அவர் இல்லாதது குறைதான்; ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக்கிற்கு அரிய வாய்ப்பு: ரோஹித் சர்மா பேட்டி

தோனி என்ற மிகப்பெரிய விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் இல்லாதது ஒரு குறைதான், ஆனாலும் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்றோரிடம் பொறுப்பு பாதுகாப்பாக உள்ளது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

7 பேட்ஸ்மென் ஒற்றை இலக்கம், 3 பேர் இரட்டை இலக்கம், ஆனால் ஸ்கோர் 372; காரணமான பேட்ஸ்மென் மிலிந்த் குமார் யார்?

ஸ்கோர் கார்டில் மிலிந்த் குமார் என்ற வீரர் 261 ரன்கள் அடித்து தன் அணியை மீட்டது தனிநபர் சாகசமாகப் பார்க்கப்படுகிறது.

தோனி நீக்கம் ஏன்? - கேப்டன் விராட் கோலி நழுவல்

மே.இ.தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பினிஷர், விக்கெட் கீப்பர் தோனியை நீக்கியது பற்றி விராட் கோலியிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது நழுவலான பதிலை அளித்துத் தப்பித்துக் கொண்டார்.

கோலிக்கு எம்.எஸ்.தோனி கட்டாயம் தேவை, ஆகவே...: சுனில் கவாஸ்கர் பேட்டி

மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனியை நீக்கியதன் மூலம் 2019 உலகக்கோப்பைக்கு இந்திய அணித்தேர்வுக்குழு நிச்சயமான ஒரு திட்டத்துடன் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா அபார சதம்: சச்சின் டெண்டுல்கர் சிக்சர் சாதனை முறியடிப்பு

மும்பையில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் ராயுடுவின் அதிரடி அரைசதங்களில் 40 ஒவர்கள் முடிவில் 261 ரன்கள் எடுத்துள்ளது.

வேறுவழியின்றி பும்ரா, புவனேஷ்வர் அழைக்கப்பட்டுள்ளனர்: நாங்கள் கொடுத்த நெருக்கடி வேலை செய்தது: மே.இ.தீவுகள் கோச் ஸ்டூவர்ட் லா சீண்டல்

இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலும் கடும் நெருக்கடி அளித்து, அனுபவம் மிக்கபந்துவீச்சாளர்கள் பும்ராவையும், புவனேஷ்குமாரையும் களமிறக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

‘அசைக்க முடியாத’ விராட் கோலி; மோசமான பேட்டிங்கில் தோனி: இந்தியா 321 ரன்கள் குவிப்பு

மேற்கந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது சதம் அடித்து 157 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321...

விசாகப்பட்டினத்தில் நாளை 2-வது போட்டி: இந்திய வீரர்களுக்கு வரவேற்பு

அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

‘அந்த 7 சாதனைகள்’: கோலி, ரோஹித் அமர்க்களம் செய்த போட்டி

கவுகாத்தியில் நேற்று நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சேர்ந்து 7 முக்கியச் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

குவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குவஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயிடம் தோற்கும் அச்சம்; உதறலில் வங்கதேசம்

டாக்கா: ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் நாளை மிர்பூரில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கும் நேரத்தில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தன் அணியினரை எச்சரித்துள்ளார்.

‘யாரைப்பற்றியும் எனக்கு கவலையில்லை;நான் இப்படித்தான்’: பும்ரா ஆவேசம்

நான் பந்துவீசும் முறை குறித்து யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, எனக்கு எது வசதியாக இருக்கிறதோ அத்தன்படிதான் பந்துவீசுவேன் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

தியோதர் டிராபி: அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் சேர்ப்பு: கம்பீர், யுவராஜ் சிங்குக்கு நோ

வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள தியோதர் டிராபோ போட்டியில் இந்திய ஏ ,பி, சி அணியில் அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்?

இங்கிலாந்தில் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது

கெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம்? ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை

தெளிவான வீடியோ ஆதாரம் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தார்

தன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் சதம் அடித்த தன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுவழங்கி கவுதம் கம்பீர் பெருந்தன்மை

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியின் போது, தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதை முதல்சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர்... தொந்தரவு செய்ய விரும்பவில்லை: ஜார்கண்ட் அணிக்கு ஆடுவது பற்றி தோனி கூறியதாக தகவல்

பேட்டிங் பார்முக்காகத் தேடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விஜய் ஹஜாரே டிராபி நாக்-அவுட் போட்டிகளுக்காக ஜார்கண்ட் அணியில் ஆடமாட்டார் என்று ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி; ரஹானே நிதானம்: இந்தியா 308/4

900 ரன்கள் பிட்சில் மே.இ.தீவுகள் ராஸ்டன் சேசின் அற்புதமான சதத்துடன் (106) 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான துயரம்

32 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் அவருக்கு வந்துள்ள புரியாத புதிர் நுரையீரல் நோய் என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் அவரே தெரிவித்துள்ளார்.

2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால், விஹாரிக்கு இடமில்லை: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஹைதராபாத்தில் நாளை தொடங்க இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.