Category Archives: விளையாட்டு செய்திகள்

‘ஒருவரும் செத்துவிடப் போவதில்லை’: சேவாகிற்கு டீன் ஜோன்ஸ் மறைமுக பதிலடி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து தகுதி பெறும் அணியுடன் இந்திய அணி விளையாடி அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் 3 சதங்கள், கோலி 46 ரன்கள்: ஆஸி.தொடரில் இதற்கு ஈடுகட்டுவாரா கோலி? ஸ்டீவ் வாஹ் பதில்

விராட் கோலி இப்போது கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மென் ஆனாலும் அவர் வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தன் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

‘‘கருணாநிதி சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்”

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகராக இருந்தார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1990-களில் சச்சின்; தற்போது விராட் கோலி: இந்திய கிரிக்கெட் சுமைதாங்கிகள்

புள்ளி விவரங்கள் ரீதியாகவே சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பொறுப்புத் தண்டத்தை விராட் கோலி பெற்றதாகவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் கூற வேண்டியுள்ளது.

‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

` சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து

மிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன?- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்

இங்கிலாந்தில் இந்திய ஸ்பின்னர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது 2002க்குப் பிறகு நிகழவில்லை. அஸ்வின் மிகவும் நெருங்கி வந்து நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வரை வந்தார்.

ஷமி, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

பர்மிங்ஹாமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின், ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

இலங்கையைப் பந்தாடியது தெ. ஆப்பிரிக்கா: ரபாடா, ஷம்சி பந்துவீச்சில் சிதைந்தது

ரபாடா, ஷம்சி ஆகியோரின் பந்துவீச்சில் தம்புலாவில் இன்று நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.

‘அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு நோ, நோ’: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காகஇந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

61 ஆண்டுகளுக்குப் பின் சாதனை: இலங்கைக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர்

இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென் ஆப்பிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

2018 உலகக் கோப்பை கால்பந்தின் அதிகபட்ச தாக்கம்: ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்

ரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கோப்பை கால்பந்து 2018, மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் மட்டுமல்ல, 115 பில்லியன் பதிவுகளைப் பெற்று ட்விட்டரிலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது.

ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலி புதிய உச்சம்

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எப்போதும் இல்லாத புதிய உச்சத்தையும், புள்ளிகளையும் அடைந்துள்ளார்.

சச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை ஒரேயொரு கோல் போட்டு 1-0 என்று பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 1998-ன் நினைவுகளுடன் நுழைந்தது.