Category Archives: தமிழ்நாடு செய்திகள்

24 மணி நேரத்தில் மழை வரும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா? - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்

காவிரி சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என, கர்நாடகத்தின் புதிய முதல்வர் குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

வீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு

சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசித்தவர் நடராஜன் (55). இவரது மனைவி லட்சுமி (48). பூ வியாபாரம் செய்து வந்தனர். லட்சுமி வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராஜன் கொண்டுசென்று விற்று வருவார். நடராஜன் லட்சுமி தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வி, சுகன்யா...

ரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை

கோவை போஸ்டர்கள், ரஜினி ரசிகர்கள் கைது நடவடிக்கை, அதைத் தொடர்ந்து புறப்பட்ட அவர்களின் ஆவேசம் மற்ற மாவட்டங்களிலும் பற்றிக் கொண்டது. அதன் வீரியம் அடுத்த வாரமே விழுப்புரத்தில் ஒரு சம்பவம் மூலம் கூடுதல் ஆனது.

கமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்

சென்னை காவிரி பிரச்சினை சம்பந்தமாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என 9 கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

திமுகவில் இருந்தபோது குஷ்பு நாகரிகமாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தரக்குறைவான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட்டதில்லை எனவும், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை

கடலூரில் ஒரு தம்பதியினரின் சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததாக புரோகிதர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பாம்பாட்டி தலைமறைவாகி விட்டார்.

அன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே சிக்கலைத் தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதச்சார்புள்ள ஆட்சியை அகற்றிட தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதச்சார்புள்ள ஆட்சியை அப் புறப்படுத்த தேசிய அளவில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்

காஞ்சிபுரம் டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநராக இருந்த சதீஷ்(38) நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா?- முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கண்டனம்

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதை தன் சாதனையாக காட்டிக்கொள்ள முதல்வர் பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மின்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவை தூய்மையாகவும், மாணவர்கள் கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் உட் பகுதியில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வரைவோலை மூலம் விண்ணப்பக் கட்டணம் பெற அண்ணா பல்கலைக்கழகம் மறுத்ததால் நீதிபதிகள் மாற்று யோசனை

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் வரைவோலையாக செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இதற்கு மாற்று யோசனை ஒன்றை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் உருக்கம் | 'தென்னிந்திய நதிகள் இணைப்பே என் வாழ்நாள் கனவு'

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த். (அடுத்த படம்) படத்தின் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினி. அருகில் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர்.