Category Archives: தமிழ்நாடு செய்திகள்

தனியார்கள் கூறும் வானிலை ஆய்வு செய்தி; யூகங்கள் அடிப்படையில் ஊடகங்களில் பரப்புகிறார்கள்: அமைச்சர் உதயகுமார்

இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் வானிலை அறிக்கையே நம்பகமானது, புயலை உருவாக்கி புயலுக்கு பெயரே வைக்கும் வேலையில் சிலர் ஈடுபடுகிறார்கள் என வருவாய் நிர்வாகத்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்

5 மாநில தேர்தல்கள் பாஜக தோல்வி மோடிக்கு கிடைத்த பலத்த அடி, காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி சொன்னது ஆணவத்தின் உச்சக்கட்டம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது: குவியும் பாராட்டு

2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.

குடித்துவிட்டு மகளை தாக்கிய மருமகனை கொன்ற மாமனார்: 7 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

குடித்துவிட்டு மகளுடன் தகராறு செய்த மருமகனை கொன்ற மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு?- டிசம்பர் 15-ம் தேதி முதல் கனமழை பெய்யும்: செல்வகுமார் தகவல்

தெற்கு அந்தமான் அருகே டிசம்பர் 9-ம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலிமையடைந்து புயலாக மாற வாய்ப்பு

அதிகரிக்கும் பெண் சிசுக்கொலைகள்: தமிழகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பிற்போக்கு மனநிலை; மார்க்சிஸ்ட் கண்டனம்

திருவண்ணாலையில் செயல்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் 89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு: அதிர்ந்துப்போன நீதிபதிகள்; விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவு

ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தை அரசு கையாண்டவிதம் குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் அதுகுறித்த விபரமான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காவிரி ஆணையம் இன்று கூடுகிறது

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடக் கிறது. மேகேதாட்டு அணை திட்டத் துக்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய விவ காரத்தை இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் கிளப்ப வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை பற்றாக்குறை எவ்வளவு; இனிமேல் பெய்ய வாய்ப்பு உண்டா?

சென்னையை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை சீசனில் தற்போது வரை மழையளவு பற்றாக்குறையாக இருப்பதால் அடுத்து மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.

'கஜா' புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு அழிந்தன; பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

'கஜா' புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு உள்ளிட்டவை சேதமானதால், மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தாயின் திதிக்கு லீவு கேட்டதால் பிரச்சினை; சக காவலரை சாலையில் தள்ளிவிட்டு விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்து ஆய்வாளர்: வைரலாகும் காட்சி

சென்னை தேனாம்பேட்டையில் சொந்தப்பகையை தீர்த்துக்கொள்ள சாலையில் சென்ற போக்குவரத்து காவலரை திருடனை பிடிப்பதுபோல் போக்குவரத்து ஆய்வாளர் மடக்கிப்பிடிப்பதும் அவர் சறுக்கியபடி கீழே விழும் காட்சியும் வைரலாகி வருகிறது.

‘கேரளாபோல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை’- பினராயி விஜயன்போல் நீங்கள் செயல்பட்டீர்களா?- எடப்பாடிக்கு ராமதாஸ் கேள்வி

கேரளாபோல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பேட்டி அளிக்க கேரள முதல்வர்போல் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கேட்டு செயல்பட்டீர்களா? என பாமக ராமதாஸ் பதில் கேள்வி கேட்டுள்ளார்.

'கஜா' புயல்: தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டிய மு.க.ஸ்டாலின்

'கஜா' புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'கஜா' புயல்: சேத விபரங்கள் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

'கஜா' புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;

கடலூர் - பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. புயலை எதிர்கொள் ளத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்

‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல், தீயணைப்பு துறையினர், மீட்புக் குழுவினர் என அனைவரும் தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்த

800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கும் ‘கஜா’ புயல்- அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை: 8 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்தன.

நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கும் ‘கஜா’ புயல் 15-ம் தேதி காலை வேதாரண்யம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘கஜா’ 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்: சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது

வங்கக்கடலில் நிலைக்கொண்டுக்குள்ள கஜா புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி நவ.15 அன்று சென்னை-நாகை இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.