Category Archives: தமிழ்நாடு செய்திகள்

சென்னையின் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்

சென்னையின் நீர்நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அழித்து வருகின்றன. நதிகளில் மிதக்கிறது, கழிவுநீர்ப்பாதைகளை அடைக்கிறது, ஏரிகளில் ஊடுருவ முடியா திரையை உருவாக்கியுள்ளது, மீன்கள் மூச்சுத் திணறிச் சாகின்றன, இந்த நீரைக் குடிக்கும் விலங்குகள் மடிகின்றன.

செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்

ராமநாதபுரத்தில் தனது உறவுக்கார பெண்ணின் செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி அதன் மூலம் உறவுப்பெண்ணை கண்காணித்த இளைஞர் அதை வைத்து மிரட்டும்போது போலீஸிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

அகில இந்திய அளவில் டிரெண்டான பிரியாணி கடை தாக்குதல்: தொண்டரணி யுவராஜ், திவாகர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்

பிரியாணி கடையில் பாக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்திய விவகாரம் அகில இந்திய அளவில் டிரெண்டாகிவிட்டது.

அரசின் அக்கறையின்மையால் கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேதனை

வெள்ளப்பெருக்க நீரை தேக்கி வைக்க தமிழக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட தவறியதன் காரணமாக கடந்த 5 நாட்களாக கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக இதுவரை சுமார் 15 டி.எம்.சி. தண்ணீர் பயனின்றி கடலில் கலந்து வருகிறது

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீணாகும் காவிரி நீரை சேமிக்க என்ன வழி? - சரியான நீர் மேலாண்மை அவசியம்

கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

ரூ.1200 கோடி மின்வாரிய டெண்டரில் தனியாருக்கு சாதகமாக விதிகளைத் திருத்த நிர்பந்தம்: டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும்விதமாக ஜெயலலிதா பல்வேறு பணிகளை தொலைநோக்கோடு சிந்தித்து செயல்படுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐடி ரெய்டு; வரும் 23-ம் தேதி ஆளுநரை சந்தித்து திமுக முறையிடும்: ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி மற்றும் சம்பந்தி வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு குறித்தும், ஊழல்கள் குறித்தும் வரும் 23-ம் தேதி ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எட்டு வழிச்சாலை குறித்து மக்கள் கருத்தைக் கேளுங்கள்: ரஜினிக்கு கமல் பதில்

எட்டு வழிச்சாலையை ஆதரித்த ரஜினிகாந்த் முதலில் மக்களிடம் சென்று பேச வேண்டும். பிறகு அவர் கருத்து தெரிவிக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: கனிமொழியிடம் ஆதரவு கேட்ட டிடிபி கட்சி எம்.பி.க்கள்

மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் போது அதற்கு ஆதரவு தரக் கோரி திமுக எம்.பி. கனிமொழியை தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தனர்.

உயர் கல்வி ஆணையம் தேவையில்லை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழப்பு; பயிற்சியை நாங்கள் நடத்தவில்லை: கைவிரித்தது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு கஜானாவை காலி செய்த அதிமுக அரசு''- சிஏஜி அறிக்கையை முன்வைத்து ஸ்டாலின் குற்றச்சாட்டு

12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருக்கிறது என்பது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ்களை பறிகொடுத்த ஏழை மாணவர்; எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பி சென்றார்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டி படிக்க வசதியில்லாததால் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவர் பூபதிராஜா, கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.