Category Archives: தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

உயர் நீதிமன்ற உத்தரவால் நிலத்தடி நீர் எடுப்பது பாதிப்பதாக கூறி குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தவர்கள் மக்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர்: இபிஎஸ்-ஓபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற உழைக்க வேண்டும் என, அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்: மகளை காதல் திருமணம் செய்தவருக்கு சரமாரி வெட்டு; நாம் தமிழர் கட்சி நிர்வாகி தலைமறைவு

மகளை காதல் திருமணம் செய்தவரையும், அவரது உறவினர்களையும் அரிவாளால் வெட்டி, மகளை கடத்திச் சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை கன்னியாகுமரி போலீஸார் தேடி வருகின்றனர்.

லோக் ஆயுக்தாவுக்கு முதல் கையெழுத்து: சட்டம் அமலானது தெரியாமல் பேசும் கமல்

முதல்வரானால் முதல் கையெழுத்து என்ன போடுவீர்கள் என்கிற கேள்விக்கு லோக் ஆயுக்தாவுக்காக கையெழுத்து போடுவேன் என்று கமல் கூறியுள்ளார். லோக்ஆயுக்தா மசோதாவே தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதம் ஆகிறது என்பதை அறியாமல் இவ்வாறு பேசினாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும்: ஸ்டாலின்

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து 150% அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

ஒடிசா கரையருகே நிலைகொண்டுள்ள 'தித்லி' புயல் தீவிரமாக வலுவடைந்து நாளை காலை ஒடிசா அருகே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு; 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு; தற்காலிக எண் அறிவிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் எண் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக எண் வழங்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார்; அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும்: தினகரன்

மயிலாப்பூரில் யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் எல்லாச் செயல்களையும் செய்வதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான்: ஓபிஎஸ் ஒப்புதல்

டிடிவி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தது உண்மைதான் என ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார். இதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை; நாங்கள் குறைத்துவிட்டோம், நீங்கள் எப்போது குறைப்பீர்கள்?- மாநில அரசுக்கு தமிழிசை கேள்வி

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ.2.50 குறைத்துள்ளது. மாநில அரசு இதைவிட அதிகமாக குறைக்கவேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்: தலைமைச் செயலாளர் அனுமதிக்காக அனுப்பியுள்ளோம்: லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான திமுக புகாரில் விசாரணை நடத்த அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்: தொண்டர்கள் உற்சாகம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

அஜித்தின் 'தக்‌ஷா' ட்ரோன் அணி: சர்வதேசப் போட்டியில் சாதனை

நடிகர் என்பதைத் தாண்டி கார் ரேசர், பைக் ரேசர், மெக்கானிக், புகைப்படக் கலைஞர் ஆகிய துறைகளில் தடம் பதித்தவர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகர்.

திருமணமான 3 நாளில் சோகம்; வீட்டில் கழிவறை இல்லாததால் கோபம்: மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை

காதலித்து மணந்த மனைவி தன் வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

கருணாஸ் ஆதரவாளர் மனைவி வழக்கு; தி.நகர் துணை ஆணையர் மீதான புகாரை விசாரிக்கவும்: தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கருணாஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனுக்கு புதுச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான கருணாஸ் ஆதரவாளர் மனைவி அளித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹை-டெக்காக மாறும் புழல் சிறையின் பாதுகாப்பு: சாப்ட்வேர் மூலம் பராமரிக்க, கட்டுப்படுத்த முடிவு

சென்னையில் உள்ள புழல் சிறை ஹெ- டெக்காக மாற்றப்பட உள்ளது. சாப்ட்வேர் மூலம் அனைத்துக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு, கட்டுப்படுப்பட உள்ளது.