Category Archives: தமிழ்நாடு செய்திகள்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மதியம் 1:00 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமின்றி நாடு

‘‘தமிழக மக்களின் பெருந்தன்மையை கொச்சைப்படுத்தாதீர்கள்!’’ - அதிர வைக்கும் உடல் உறுப்பு தான மோசடியால் ஹிதேந்திரனின் தந்தை வேதனை

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களான அசோகன்- புஷ்பாஞ்சலி தம்பதியின் மகன் ஹிதேந்திரன். விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழகத்தில் உ

நீட் தேர்வில் மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: கட்சித் தலைவர்களுக்கு நீதிபதி கண்டனம்

நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பின்னர் கண்ணீர் வடிக்கிறார்கள், மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை? - முதல்வர் பழனிசாமி கேள்வி

வண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா, வாழைப்பழங்கள் பறிமுதல்

சேலத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா மற்றும் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்புகட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக கும்பகோணத்தில் 3 ஆண்டுகளில் அகற்றப்பட்ட 2 லட்சம் டன் குப்பை: மறுசுழற்சிக்காக பிரித்து அனுப்பப்பட்டது

இந்தியாவிலேயே முதல் முறை யாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 10 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக மலைபோல குவிந்திருந்த 2 லட்சம் டன் குப்பை 3 ஆண்டுகளிலேயே மறுசுழற்சிக்காக அகற்றப் பட்டுள்ளது.

மேட்டூர் அணையினை ஜுன் 12 ஆம் தேதியன்று திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பு இருப்பதால் இந்தாண்டும் குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதியன்று அணையினை திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்

சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வந்து மீண்டும் திரும்பும்போது வழிப்பறி நபர்களிடம் சிக்காமல் வருவோமா? என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வழிப்பறி, கத்தியால் வெட்டுவது போன்றவை அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; அடுத்தடுத்து அம்பலமாகும் சதி: அதிமுக அரசு பதவி விலக வேண்டும்- ராமதாஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் புதிது புதிதாக சதிகள் அம்பலமாகி வருகின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தப்பிக்க முயல்கின்றனர் என்று பாமக நிறுவனர

நீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி

மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்13 பொதுமக்கள் பலியானது துரதிர்ஸ்டவசமானது என இன்று வழக்கின் இடையே தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா?- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒருமித்த குரலில் நீரை திறந்துவிட கோரிக்கை வைத்திருக்கும் நேரத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை என்று ஆரம்பிப்பதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; காயமடைந்தவர்களுக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி

திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்கிறார். தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்குகிறார். தமிழக அரசு தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

வில்லிவாக்கத்தில் பரிதாபம்: உடற்பயிற்சியின்போது தலையில் தம்புல்ஸ் விழுந்து மாணவன் பலி

வில்லிவாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புல்ஸை வைத்துப் பயிற்சி செய்த போது அது தலையில் விழுந்ததால் காயமடைந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்

தூத்துக்குடிக்குச் செல்லும் விஐபிக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக சிக்கியவர் ரஜினி.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும் கலவரத்துக்கும் திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவும், அக்கட்சியின் எம்எல்ஏ கீதா ஜீவனும் காரணம். திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.