Category Archives: உலக செய்திகள்

ஆபத்தான மானை வளர்த்த ஆஸ்திரேலியர்: கொம்பால் குத்தப்பட்டு பரிதாப மரணம்

ஆபத்தான சிவப்பு வகை மான் இனத்தை வீட்டில் வளர்த்த ஆஸ்திரேலியர், அதே மான் தனது கொம்பால் குத்திக் கிழித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆபத்தான மானை வளர்த்த ஆஸ்திரேலியர்: கொம்பால் குத்தப்பட்டு பரிதாப மரணம்

ஆபத்தான சிவப்பு வகை மான் இனத்தை வீட்டில் வளர்த்த ஆஸ்திரேலியர், அதே மான் தனது கொம்பால் குத்திக் கிழித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏமனில் பள்ளியருகே குண்டுவெடித்து 7 குழந்தைகள் பலி: சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதலா?

ஏமனில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பள்ளியருகே இருந்த 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாவும் பொதுமக்களில் 54 பேர் படுகாயமுற்றதாகவும் மருத்துவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தன் மீது ஊழல் குற்றசாட்டை சுமத்திய முன்னாள் அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்கிய ஜஸ்டின்

ஊழல் வழக்கில் தன் மீது குற்றம் சாட்டிய முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கினார் கனடா பிரதமர் ஜஸ்டின். இதனால் அவர் பெரும் விமர்சனத்துக்குள்ளானார்.

தன்பாலின உறவு, கூடா நட்புக்கு கல்லால் அடித்து மரண தண்டனை: புரூனேயில் புதிய அடக்குமுறைச் சட்டங்கள் அறிமுகம்

புரூனேயில் மிகவும் கடினமான ஷரியத் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் உலகம் முழுதும் பலநாடுகளில் ’காட்டுமிராண்டித் தனமானது’ என்று கடும் கண்டனங்களுக்கு ஆளான கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனைகளும் அடங்குகிறது.

சீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது

குழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அனைத்துக் குழந்தைகளுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் இந்தியப் பாதிரியாருக்கு 6 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இந்தியப் பாதிரியாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பு: மசூத் அசார் மீது தடை விதிக்கும் தீர்மானம்- ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய அமெரிக்கா

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது தடைவிதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றம்: 2017-ஐ விட 2018-ல் இந்தியா 5% அதிகம்

2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன்ஸ் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது என்று சர்வதேச ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தப்பினார் அதிபர் ட்ரம்ப்: ‘ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை’ - முல்லர் விசாரணை அறிக்கை: ஜனநாயகக் கட்சி அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிபர் பதவிக்கே ஆபத்து விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விவகாரத்தில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது டோனல்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை

வங்கதேச அகதிகள் ‘கரையான்களா?’ - அமித் ஷா-வுக்கு அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு

அமெரிக்க அரசு மனித உரிமை அக்கறைகள் துறை, அசாமில் தங்கியிருக்கும் வங்கதேச அகதிகளை ‘கரையான்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்ததை சிகப்புக் குறியிட்டு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

உலகிலேயே செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றது சென்னை

உலகிலேயே மிகவும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு

2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.