Category Archives: உலக செய்திகள்

தப்பினார் அதிபர் ட்ரம்ப்: ‘ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை’ - முல்லர் விசாரணை அறிக்கை: ஜனநாயகக் கட்சி அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிபர் பதவிக்கே ஆபத்து விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விவகாரத்தில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது டோனல்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை

வங்கதேச அகதிகள் ‘கரையான்களா?’ - அமித் ஷா-வுக்கு அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு

அமெரிக்க அரசு மனித உரிமை அக்கறைகள் துறை, அசாமில் தங்கியிருக்கும் வங்கதேச அகதிகளை ‘கரையான்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்ததை சிகப்புக் குறியிட்டு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

உலகிலேயே செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றது சென்னை

உலகிலேயே மிகவும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு

2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

நியூஸி. மசூதித் துப்பாக்கிச் சூடு நடத்தியவனை தைரியமாகப் பிடித்த நபர்: நேரில் பார்த்தவர்கள் பிரமிப்பு

முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறது.

நியூஸிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூடு போல் இங்கு நடந்திருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவுதான் இருக்கும்: மெஹ்பூபா முப்தி கருத்து

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இதில் சுமார் 49 பேர் பலியாகினர்.

அசத்தல் செய்தியோடு அபிநந்தனின் புகைப்படம்: வைரலாகும் பாகிஸ்தான் டீக்கடை

அபிநந்தனின் புகைப்படம் மற்றும் அசத்தல் செய்தியோடு தேநீர் விற்பனை செய்யும் பாகிஸ்தான் டீக்கடை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் பள்ளியில் பயங்கரம்: இருவர் நுழைந்து தாறுமாறாக துப்பாக்கிச்சூடு- 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

பிரேசிலின் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர்.

வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அமெரிக்கா

வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

156 பேர் பலியான எத்தியோப்பியா விமான விபத்து: விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்ட விமானி

இந்தியர்கள் உட்பட 156 பேர் பலியான எத்தியோப்பியா ஏர்லைன்ஸின் விமானி தான் விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு தேவை அமைதி; போர் அல்ல - இம்ரான் கான்

பாகிஸ்தான் இனி தனது நிலத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்காது என்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலேயே நோக்கம் கொண்டுள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து வெளியேற அழுத்தம் தரப்படவில்லை: அமெரிக்க ராணுவம்

சிரியாவிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; பலர் காயம்

ஆப்கன் தலைநகர் காபூலில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் சவுதியின் சர்ச்சை செயலி: நீக்க கூகுள் மறுப்பு

ஆப்ஷெர் என்ற சர்ச்சைகுரிய செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.