Category Archives: உலக செய்திகள்

என்ன இது ட்ரம்ப்.. சிறுபிள்ளைத்தனமா இருக்கு..?

இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும்அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. தெளிவில்லாத அமெரிக்க வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல இது.

உலக வங்கியின் புதிய தலைவர் இவாங்கா ட்ரம்ப்?

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் அமர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ எல்லைச் சுவர் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு ‘பை பை’ கூறி வெளியேறிய ட்ரம்ப்

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது தொடர்பாக எதிர்க் கட்சிகள் உடனான சந்திப்பில் சுமுக முடிவு கிடைக்காததால் அதிபர் ட்ரம்ப் ’பை பை’ கூறி விடை பெற்று இருக்கிறார்.

''நாட்டுக்காக உயிர் துறந்த இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரியே அமெரிக்காவின் ஹீரோ'': ட்ரம்ப் புகழாஞ்சலி

நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோத அந்நியர்களை தடுத்து நிறுத்தியபோது கொல்லப்பட்ட இளம் போலீஸ் அதிகாரியான ரோனில் ரோன் சிங் தான் அமெரிக்காவின் ஹீரோ என்று ட்ரம்ப் புகழாஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்த நிலையில் கிம் - ஜி ஜின்பிங் சந்திப்பு

அமெரிக்காவுக்கு விடுத்த மிரட்டல்களுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் கிம் ஜாங் உன் சீனா சென்றிருக்கிறார்.

'என் குடும்பத்தினரே என்னைக் கொன்றுவிடுவர்'- புகலிடம் கேட்டு தாய்லாந்தில் கதறிய சவுதி இளம்பெண்

சவுதியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த இளம்பெண், பேங்காக் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை அடுத்து புகலிடம் கோரியுள்ளார்.

வெற்றியும்.. தேர்தல் கலவரமும்..

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினாவின் மாபெரும் வெற்றி எதிர்க் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனது குழந்தைகள் போராடும் குணம் கொண்டவர்கள்: ஏஞ்சலினா ஜோலி பெருமிதம்

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சனா ஜோலி தனது குழந்தைகள் போராடும் குணம் படைத்தவர்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

'வெள்ளை மாளிகையில் தனிமையில் இருக்கிறேன்': அதிபர் ட்ரம்ப் கவலை: 'ஷட்டவுன்' 3-வது நாளாக நீடிப்பு

அமெரிக்காவில் ஷட்டவுன் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா சுனாமிக்கு பலி 168 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே நேற்று ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மீண்டும் ‘ஷட் டவுன்' : அதிபர் ட்ரம்ப் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் 'ஷட்டவுன்' தொடங்குகிறது.

சிரியா போர்: அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற்ற ட்ரம்பின் முடிவுக்கு வலுக்கும் விமர்சனம்

சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதால், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முட்டாள் என்று கூகுளில் தேடினால் ட்ரம்ப் பெயர் ஏன் வருகிறது? - சுந்தர் பிச்சை விளக்கம்

கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படம் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார்.

இரண்டு நாள் தேடுதல் வேட்டை: பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்ட இளைஞர் சுட்டுக் கொலை

இரண்டு நாட்கள் பெரும் தேடுதல் வேட்டைக்கு பிறகு பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரிட்டன்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆட்சிக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் சுமார் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.