Category Archives: உலக செய்திகள்

அறையைச் சுத்தம் செய்யச் சொன்னதற்காக ஒரு கொலை: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை

அமெரிக்கா, அரிசோனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தன் 65 வயது பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.

ராஜபக்‌சவுக்கு ஆதரவில்லை: எதிர்த்து வாக்களிக்க போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சவுக்கு எதிராக, வாக்களிக்க உள்ளதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஜப்பானில் மாயமாக மறைந்த சிறிய தீவு: கடலில் மூழ்கியதா?

ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே.

தலையில்லாமல் நடந்துவரும் சிறுமி: உலகம் முழுவதும் வைரலான வீடியோ

தலையில்லாத முண்டத்துடன் சிறுமி ஒருவர், கையில் தலையைப் பிடித்தவாறு நடந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலோவீன் தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறுமியின் தாய் இந்தத் தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

குடியுரிமை குறித்த ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கப்படாது என்ற ட்ரம்ப்பின் திட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

4 வயது சிறுமியை கடித்துக் குதறிய சிங்கம்: ரஷியாவில் சர்க்கஸ் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

ரஷியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது, பயிற்சியாளரின் கட்டுப்பாட்டை மீறிய சிங்கம், பார்வையாளர்கள் நின்றிருந்த இடத்தின் மீது திடீரென பாய்ந்து 4 வயது சிறுமியை கடித்துக் குதறியது.

இந்தோனேசிய விமான விபத்து: 189 பயணிகளும் உயிரிழந்தனர்; இந்திய விமான கேப்டனும் பலியானதாக அறிவிப்பு

இந்தோனேசிய விமானத்தில் விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விமானத்தை இயக்கிய கேப்டனும், இந்தியரான பாவ்யே சுனேஜா பலியாகிவிட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளத

ட்ரம்ப் கெடு முடிய இன்னும் 10 நாட்கள்; கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து: என்ன செய்யப்போகிறது இந்தியா?

நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரான் மீதும் அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

இலங்கை பிரதமராக நானே நீடிக்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டம்

இலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

‘‘கெடு முடிய இன்னும் 10 நாட்கள் தான்’’- இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைய 10 நாட்கள் மட்டுமே உள்ளன, அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...

ஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு: அமெரிக்க வரலாற்றில் இதுமுதன்முறை

அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் லாட்டரியில் ஒரு சீட்டுக்கு 12,000 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வந்த சவுதியின் கூலிப்படை நபர்: ஆதாரத்தை வெளியிட்ட துருக்கி

சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகளை அவரைப் போன்ற தோற்றமுடைய சவுதியைச் சேர்ந்த நபர் அணிந்து வரும் வீடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டுள்ளது.

விழுந்து விழுந்து விளையாடுவோமா?- இணையத்தை ஆட்டிப் படைக்கும் ‘பாலிங் டவுண் சேலஞ்ச்'

ஐஸ் பக்கெட், நீலத் திமிங்கலம், மோமோ, கிகி, பிட்னஸ் சேலஞ்ச் என ஏதாவது ஒரு சவால் இணையதளத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது "பாலிங் டவுண்' (கீழே விழுதல்) என்ற சவால் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

தேர்தலை சீர்குலைக்க காத்திருக்கும் சீனா, ரஷ்யா, ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க இடைத்தேர்தலைச் சீர்குலைக்க சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் காத்திருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.

ஜமால் மாயமான விவகாரம்: சவுதிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் புதின்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி விவகாரத்தில் முழுமையான தகவல் தெரியாத நிலையில் சவுதியுடனான எங்கள் உறவைத் துண்டித்துக்கொண்டால் அதில் எந்த நியாயமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு ரூ. 700 கோடி பணம் அனுப்பிய சவுதி: ஜமால் கொடூர கொலையில் சமரச முயற்சி?

பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

ஜமால் விவகாரம்: சவுதி செல்லும் மைக் பாம்பியோ

பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சவுதி செல்ல இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புயல்காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஆபத்தைத் தவிர்க்க பக்கவாட்டிலேயே இயக்கி விமானத்தை லேண்ட் செய்த பைலட்: குவியும் பாராட்டு

பிரிட்டனில் கேலம் என்ற புயற்காற்று புரட்டிப் போட்ட்டுக் கொண்டிருந்த சமயம், பிரிஸ்டல் விமான நிலையத்தின் ஓடுபாதை தெரியாத அளவுக்கு காற்று வெளுத்து வாங்கியது.