Category Archives: உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி, 100-க்கும் அதிகமானோர் காயம்

ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

‘ட்ரம்புடன் வர்த்தகப் போர்’- பதிலுக்கு பதில் கொடுத்தது சீனா; அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி

இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் கடும் மோதல் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்துள்ளது.

இனி பிரச்சினை இல்லை... நிம்மதியாக உறங்குகள்: ட்ரம்ப் ட்வீட்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க சென்ற ட்ரம்ப் இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்புடன் செல்பி எடுக்க ஆசை: சிங்கப்பூரில் ரூ 38 ஆயிரத்தை இழந்த தமிழர்

சிங்கப்பூர் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்கும் ஆசையில், அவர் தங்கிய ஹோட்டலில் 38 ஆயிரம் ரூபாய்க்கு அறை எடுத்து தங்கிய தமிழர் ஒருவர் கடைசியில் அவரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். ட்ரம்ப் வாகன அணிவகுப்பு செல்லும் வழியில் எடுத்த...

கேள்வி கேட்ட ட்ரூடோ; கடுப்பான ட்ரம்ப்: ஜி7 நாடுகள் கூட்டமும் அமெரிக்காவின் அடாவடியும்

ஜி7 நாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா பிரதமரை கடுமையாக விமர்சித்த விவகாரம் அந்த அமைப்பின் மற்ற நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுமை இல்லாத ட்ரம்ப், ட்விட் மூலம் உறவை கெடுத்துக் கொண்டார் என ஜி7 நாடுகள்...

சீனாவுக்கு ரகசிய ஆவணங்களை விற்ற வழக்கில் சிஐஏ முன்னாள் அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை சீனாவுக்கு விற்றதாக கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரியை, குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: கராச்சியில் இம்ரான் கான் வேட்புமனு தாக்கல்

பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ (நவாஸ்) கட்சி அரசின் பதவிக்காலம் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசிரூல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

இப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். இதில் பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.

மெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா

அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல் எற்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை அந்நாடு ரத்து செய்துள்ளது.

இந்தியருக்கு ஜாக்பாட்: அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு

நைஜீரியாவில் வசிக்கும் இந்தியருக்கு அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு கிடைத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி

சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள லிட்டில் இந்தியாவில் ரூபே கார்டை பயன்படுத்தி மதுபானி ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார்.

ஐ.நா அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்

ஐ.நா அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த அமைதிப்படைக்கு அதிகமான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

வடகொரிய அதிகாரிகள் அமெரிக்காவில் முகாம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதையொட்டி வடகொரியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2014-ல் காணாமல்போன எம்.எச்-370 மலேசிய விமானம் தேடும் பணி நிறுத்தம்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானம் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா முடிவுக்கு டிரம்ப் நன்றி : அணு சோதனை மையம் அழிப்பு

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர்.