Category Archives: உலக செய்திகள்

ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; பலர் காயம்

ஆப்கன் தலைநகர் காபூலில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் சவுதியின் சர்ச்சை செயலி: நீக்க கூகுள் மறுப்பு

ஆப்ஷெர் என்ற சர்ச்சைகுரிய செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.

தீவிரவாதிகளை தாக்க கொடுத்த எஃப்-16 விமானத்தை இந்தியா மீது ஏவிய பாகிஸ்தான்: விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி விசாரணை நடைபெறவுள்ளது.

இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது: பாகிஸ்தானில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்

இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று கோரி பாகிஸ்தானி நெட்டிசன்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

பாலியல் அடிமைகளாக்கப் பிடித்து சென்ற 50 பெண்களைக் கொன்று தலைகளை குப்பைத் தொட்டியில் வீசிய ஐஎஸ்: பிரிட்டன் வீரர்கள் அதிர்ச்சி

50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள் தலைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAS)பகீர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு - ஈக்வேடார் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் பெரு - ஈக்வேடார் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியது.

வங்கதேசத்தையே உலுக்கிய தீ விபத்து: 10 முதல் 12 பேர் மீது போலீஸார் சந்தேகம்

வங்கதேசத்தையே உலுக்கிய தீ விபத்தில் 10 முதல் 12 பேர் மீது சந்தேகம் உள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தியாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.6.7 கோடி: அமெரிக்காவில் இருந்து தனியொருவராகத் திரட்டிய இந்திய இளைஞர்

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ அமெரிக்காவில் இருந்து தனியொருவனாக ரூ.6.7 கோடியை இந்திய இளைஞர் விவேக் படேல் திரட்டியுள்ளார்.

‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி இளவரசர் பாக் பயணம்: 5 லாரிகளில் அனுப்பப்பட்ட பொருட்கள்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இந்த நிலையில் இளவரசருக்கு தேவையான பொருட்கள் 5 லாரியில் அனுப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாம்பைக் காட்டி மிரட்டி வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை

திருடன் என்று சந்தேகிக்கப்பட்ட பப்புவா மனிதரை பாம்பைக் காட்டி மிரட்டி வாக்குமூலம் பெற இந்தோனேசிய காவல்துறை முயன்றது. இதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததை

‘‘தீயின் புயலைப் போன்ற பேஸ்புக் நேர்மறையான சக்தி’’ - ஜூக்கர் பெர்க் பெருமிதம்

சிக்கலான சமூக வலைப்பின்னலில் பேஸ்புக் சமுதாயத்திற்கான பரந்துபட்ட ஒரு நேர்மறையான சக்தியாக திகழ்வதாக 15வது ஆண்டுநிறைவுவிழாவில்மார்க் ஜூக்கர் பெர்க் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் உறைகுளிரில், மையிருட்டில் நியூயார்க் சிறையில் வாடிய கைதிகள்

அமெரிக்காவில் புரூக்ளின் சிறையில் மின்சாரம் இல்லாமல் நாட்கணக்கில் மைனஸ் 18 டிகிரி உறைகுளிரில் நடுநடுங்கி உயிருக்குப் போராடிய கைதிகள் விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்படுமா?- அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைத் தடுக்க சுவர் எழுப்பும் பணிக்கு நிதிதேவைக்காக அவசரநிலை அறிவிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.