பிஎஸ்என்எல் போஸ்ட் பெய்ட் திட்டத்தில் 60 சதவீத கட்டண சலுகை

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்ட் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீத கட்டண சலுகை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' 'லூட் லோ' என்ற திட்டத்தின் கீழ், தனது போஸ்ட் பெய்ட் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.225 ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125, ரூ.1,525 ஆகிய மாதாந்திர கட்டண திட்டங்களில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதேபோல், ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, , ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125 மற்றும் ரூ.1,525 ஆகிய மாதாந்திர கட்டண திட்டங்களில் 500 சதவீதம் கூடுதல் டேட்டா சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு www.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube