மனைவியின் காதலனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற கணவன்

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை  உள்ளது.  இந்த நிலையில் நிர்மலாவுக்கு  அதே ஊரை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு  ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்து உள்ளனர். 

இது குறித்து தகவல் நிர்மலாவின் கணவருக்கு தெரியவந்து உள்ளது. அவர்  மனைவியை பலமுறை எச்சரித்து உள்ளார். அவர் கேட்கவில்லை, இன்று மனைவி கையும் களவுமாக பிடிபட்டார். 

இதனால் ஆத்திரம்  அடைந்த கணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியையும் அவரது கள்ளக்காதலரையும் நிர்வாணமாக ஒரு மரத்தில் கட்டிவைத்து சரமாறியாக தாக்கி உள்ளனர். இதில் கள்ளக்காதலன் அதே இடத்தில் பலியானார். நிர்மலா  படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவரும் அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.

Google+LinkedinYoutube