வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மொபைல் எண் மறு சரிபார்ப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மொபைல் எண் மறு சரிபார்ப்புக்கான விரிவான நடைமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறைகளை வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து கடைப்பிடிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், ஆகியோர் இந்திய மொபைல் எண் இணைப்பை வைத்துள்ளனர். இவர்கள் மொபைல் எண்ணை மறுசரிபார்ப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தன. தற்போது அந்த நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலும் ஆதார் கார்டு இல்லையென்றால் அவர்களது மொபைல் எண்ணை சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகளின் மூலம் ஆதார் கார்டு இல்லையென்றாலும் மொபைல் எண்ணை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிபார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு மொபைல் எண் மறுசரிபார்ப்பு செயல்முறைகளையும் தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஐவிஆர்எஸ் முறையில் ஒன் டைம் பாஸ்வேர்டு(ஓடிபி) அனுப்பி மொபைல் எண்ணை சரிபார்க்கலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொபைல் எண்ணை இணையத்தின் மூலமாகவும் சரிபார்ப்பதற்கான நடைமுறைகளையும் தொலைத்தொடர்புத் துறை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது.

Google+LinkedinYoutube