லட்சத்தீவில் கடலோரக் காவல்படையால் 72 மீனவர்கள் மீட்பு

'ஒக்கி' புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழும் பதற்றமான சூழ்நிலைக்கிடையில், கடலோரக் காவல்படை லட்சத்தீவில் இருந்து 72 மீனவர்களை மீட்டுள்ளது.

இதுகுறித்துக் கூறிய அதிகாரிகள் தரப்பு, ''கடலோரக் காவல்படைக் கப்பலான ஐசிஜிஎஸ் சாம்ராட், லட்சத்தீவில் 72 மீனவர்களை மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பித்ரா தீவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

72 மீனவர்களில் 58 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; 14 பேர் கேரள மீனவர்கள். அவர்களுக்குத் தேவையான அளவு குடிநீரும், போதிய உணவும் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அவர்களின் படகுகள் பித்ரா தீவில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாயமான மீன்பிடிப் படகுகளைத் தேடவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் இரண்டு மீனவர்கள் முன்வந்தனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கொல்லம் துறைமுகத்தில் ஐஎன்எஸ் கபிராவோடு தங்கள் பணியைத் தொடங்கினர்.

இவர்கல் கேரள மாநில கடலோரக் காவல்படையுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபடுவர்'' என்று தெரிவித்துள்ளது.

Google+LinkedinYoutube