கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''கடந்த 29-ம் தேதி ஒக்கி புயல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வீசியதால் கன்னியாகுமரி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் மின் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் தோட்டக் கலை பயிர்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுசீரமமைப்பு பணிகள் செய்ய அதிக அளவில் நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அதிக அளவில் நிதி கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Google+ Linkedin Youtube