இந்தியா, 1,300 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்தியா, 1,300 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டை கூறி உள்ளது.


இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறி இருப்பதாவது: 2017-ம் ஆண்டில் இந்தியா எப்போதும் இல்லாத வகையில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. போர் நிறுத்தங்களை மீறி எல்லைப்பகுதியில் 1,300 முறை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.175 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் மேலாதிக்க நடத்தை குறித்து பாக்.,பல முறை கவலை தெரிவித்துள்ளது.


நாட்டில் போர் குணமிக்க இடம் இல்லை என்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் தெளிவாக உள்ளது. உளவுத்துறையின் தகவல் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறோம். என கூறினார்.

Google+ Linkedin Youtube