6 மாத சிறை தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து விடுதலையானார் நீதிபதி கர்ணன்

கொல்கத்தா, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் மற்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி விமர்சித்ததால் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகும் நீதிபதிகள் பற்றி அவதூறாக கருத்து கூறியதால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கடந்த மே மாதம் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து கர்ணன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் பதவியில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றார். 1 மாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவையில் தலைமறைவாக இருந்த கர்ணன் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் தண்டனை காலம் முடிந்து இன்று கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை அழைத்துச் செல்வதற்காக சென்னையில் இருந்து அவரது மனைவி சரஸ்வதி கொல்கத்தா சென்று இருந்தார். அவர் கணவரை ஜெயில் வாசலில் இருந்து அழைத்துச் சென்றார்.

Google+ Linkedin Youtube