தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறல் பா.ஜ.க. எம்.பி.க்கு ஒரு மாத சிறை; ரூ.100 அபராதம், ஜாமீனும் வழங்கப்பட்டது

சித்தார்த்நகர்,

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது.  இதில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது.  இந்த தேர்தலில் பான்சி நகரில் பாரதீய ஜனதா எம்.பி. ஜக்தாம்பிகா பால் பிரச்சாரம்  மேற்கொண்டார்.  ஆனால் பான்சி நகரில் நடந்த பேரணி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட வாகன எண்ணிக்கையை விட கூடுதலான வாகனங்களை பயன்படுத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது பான்சி கொத்வாலி பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிமன்ற நீதிபதி சஞ்சய், பாலுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  தொடர்ந்து ரூ.100 அபராதம் விதித்ததுடன் உடனே ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டார்.

Google+ Linkedin Youtube