அத்துமீறி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் சுட்டுக்கொலை


அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தின் அஜ்னாலா பகுதி இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவில் ரோந்து சென்றனர். அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார்.

 இதைக்கவனித்த எல்லைப்பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது எச்சரிக்கையை மீறி எல்லையில் ஊடுருவ முயன்ற அவரை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் அஜ்னாலா எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான்  ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Google+LinkedinYoutube