”நீதி வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

ராஞ்சி,

கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. லாலு பிரசாத் யாதவ், பிவாண்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். தனக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில், நீதி நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். 

லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:- “ நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங், பாபா சாகேப் அம்பேத்கார்  போன்ற தலைவர்கள் தங்கள் முயற்சிகளில் தோல்வி அடைந்தனர். வரலாறு அவர்களை வில்லன்களாக சித்தரித்தது. இனவாத மற்றும் சாதியவாத சிந்தனைகள் உள்ளவர்களுக்கு அவர்கள் இன்னும் வில்லன்களாக உள்ளனர். எந்த வேறுபட்ட அணுகுமுறையையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்மையை பொய் போல சித்தரிக்க முடியும். இறுதியில் நீதிதான் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார். 

Google+ Linkedin Youtube