ஜியோ-வின் புத்தாண்டு சலுகை ரூ.199-க்கு தினமும் 1.2 ஜி.பி. டேட்டா

மும்பை, 

 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே பல்வேறு கட்டண சலுகைகளை அதிரடியாக அறிவித்து புரட்சி செய்து வருகிறது. 

இந்த நிலையில் புத்தாண்டு சலுகையாக ஜியோ நிறுவனம் இரண்டு புதிய கட்டண திட்டங்களை "ஹேப்பி நியூ இயர் 2018"  என்ற பெயரில் அறிவித்து உள்ளது. 

ரூ.199 மற்றும் ரூ.299 ஆகிய இரண்டு திட்டங்கள் அறிமுகமாகி உள்ளன.

ரூ.199 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினமும் 1.2 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலி பயன்பாடு வரம்பற்றது.

ரூ.299 திட்டமானது நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் கொண்டது. அந்த திட்டத்தை போல இதுவும் வரம்பற்ற அழைப்புகளை கொண்டது. 

முன்பு நாள் ஒன்றுக்கு ஒரு ஜி.பி.டேட்டா என்ற திட்டத்துக்கு 309 ரூபாய் கட்டணம் இருந்தது.

Google+ Linkedin Youtube