வடகொரியா மீது புதிய தடைகளை விதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

வாஷிங்டன்,

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு ஐ.நா. அமைப்பு பொருளாதார தடைகளை விதித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மையத்தினை தாக்கும் வலிமை எங்களிடம் உள்ளது என வடகொரியா சமீபத்தில் தெரிவித்தது.  இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.  இதனை தொடர்ந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு தடை செய்யும் முயற்சியாக அந்நாடு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான வரைவு கொள்கை ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது.  இந்த வரைவு கொள்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன.  இதனால் 90 சதவீத சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வடகொரியா இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும்.

வடகொரியாவின் மக்கள் பசியாலும், ராணுவ வீரர்கள் பாதிப்படைந்த நிலையிலும் உள்ள நிலையில், அதிக அதிகாரம் நிறைந்தவராக மேற்கொள்ளும் கிம் அரசின் மற்றொரு முயற்சியிது.  ஆனால் சர்வதேச சமூகத்திற்கு முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு சவால்.  அதனால் நாங்கள் இந்த தடையை விதித்துள்ளோம் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத அணு ஆயுத வளத்திற்காகவும் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்காகவும் பெருமளவிலான பெட்ரோலிய பொருட்கள் வடகொரியாவுக்கு பயன்படுகின்றன. 

இவற்றின் விநியோகம் ரத்து செய்யப்படுவதனால் இத்தகைய ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் குவிப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படும் என ஐ.நா.வுககான இங்கிலாந்து தூதர் மேத்யூ ரைகிராப்ட் கூறியுள்ளார்.

Google+LinkedinYoutube