டோனியை தான் 3-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ரவிசாஸ்திரிக்கு சிக்னல் காட்டிய ரோகித் சர்மா

இந்தூர், 

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டில், முதலில் பேட் செய்த இந்திய அணி 260 ரன்கள் குவித்து  இலங்கையை பந்தாடியது. துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் 
ரோகித் சர்மா 118 ரன்களில் (43 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) அவுட் ஆனார். 

அதேபோல், மற்றொரு துவக்க வீரர் லோகேஷ் ராகுலும் 89 ரன்கள் குவித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு 3-வது வீரர்காக களம் இறங்கிய டோனி, தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாலய இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி  88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முன்னதாக,  டோனி 3.-வது வீரராக களம் இறக்கப்பட்டது ரசிகர்களை வியப்படையச்செய்து இருந்த நிலையில், டோனியை 3-வது வீரராக களம் இறக்குமாறு கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு மைதானத்தில் சைகை மூலமாக தெரிவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோனி ரசிகர்கள் ரோகித் சர்மாவை புகழ்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா, ரவிசாஸ்திரியை நோக்கி கீப்பிங் செய்பவரை களம் இறக்குமாறு தனது சைகையால் செய்து காட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோகித் சர்மா, இவ்வாறு சிக்னல் செய்கையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். 

Google+LinkedinYoutube