அதர்வாவுடன் ஜோடி சேர்ந்தார், ஹன்சிகா!

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை அவுரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் டைரக்டு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படப் பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடை பெறுகிறது.

“படத்தின் கதையை சாம் ஆண்டன் என்னிடம் சொன்னபோதே இந்த படத்துக்கு அதர்வாதான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன். படப்பிடிப்பு தொடங்கியபின், ஹன்சிகாவுக்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன்” என்கிறார், தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்! 

Google+LinkedinYoutube