3-வது சுற்று முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

11.24 AM: 3-வது சுற்று முடிவில் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 333 வாக்குகள் கிடைத்துள்ளது.

11.05 AM: 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 7,033 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3,750 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 459 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார்.

10.47 AM: ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தையே ஆர்.கே.நகர் மக்கள் இந்த இடைத்தேர்தலில் பிரதிபலித்திருக்கிறார்கள்- மதுரையில் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.

10.36 AM: இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

10.05 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. சுமார் 45 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.10.25 AM: 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,421, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 4,521, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 2,324, நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 747, பாஜகவின் கரு.நாகராஜன் 173 வாக்குகள் பெற்றுள்ளனர்.

9.34 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக - டிடிவி தரப்பு மோதலை அடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

9.20 AM: முதல் சுற்று நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 1,182 பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் கரு.நாகராஜன் 66 வாக்குகள் பெற்றுள்ளார்.9.25 AM: நோட்டாவுக்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பாஜக வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகளைவிட அதிகமாகும்.

9.00 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம், அதிமுக தலைமை அலுவலகம் ஆகியன் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

8.25 AM: தற்போதைய நிலவரப்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடியாவிட்டாலும்கூட சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

38-வது எண் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டு நேதாஜி நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகள் உள்ளன.


எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்..8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது.

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ‘விவி பாட்’ இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை:

வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

 ‘வெப் காஸ்டிங்’ மூலமும் பார்க்க முடியும். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Google+LinkedinYoutube