எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கு தல் நடத்தி வருகிறது. நேற்றும் தாக்குதல் தொடர்ந்தது.

மதிய வேளையில், காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டம் கேரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் ‘திடீர்’ தாக்குதலில் ஈடுபட்டனர்.

4 பேர் சாவு

இந்த தாக்குதலில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர் கள் பலியானார்கள். ஒரு வீரர் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பலியான மேஜரின் பெயர் பிரபுல்லா என்றும், பலியான ராணுவ வீரர்கள் பெயர் பர்கார், குர்மீத் சிங், குர்மைல் சிங் என்றும் தெரிய வந்தது. 

Google+ Linkedin Youtube