சத்தீஷ்கார் சட்டசபையில் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலத்தில் ராமன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 90 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவுக்கு 49 பேரும், காங்கிரசுக்கு 39 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருவரும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். மாநில அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என 68 குற்றச்சாட்டுகளை கூறி கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சி, மாநில அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது.

இந்த தீர்மானத்தின் மீது 19 மணி நேரம் விவாதம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 48 பேரும், ஆதரவாக 38 பேரும் வாக்களித்தனர். இதனால் 10 ஓட்டுகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் தான் 15 வருடங்களாக ஆளுங்கட்சியாக இருக்கிறோம். காங்கிரஸ் இந்த 15 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 15 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும் என்று முதல்-மந்திரி ராமன்சிங் கூறினார். 

Google+ Linkedin Youtube