2006ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு; 3 குற்றவாளிகள் விடுவிப்பு

மும்பை,

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள நகரம் மாலேகான்.  கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ந்தேதி இங்கு தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.  இதில் 37 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தில் தீவிரவாத ஒழிப்பு படையினர் சிமி இயக்கம் மீது குற்றம் சாட்டி 9 முஸ்லிம்களை கைது செய்தனர்.  ஆனால் 2013ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத குழு மீது குற்றம் சாட்டப்பட்டது.  இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஷிவ்நாராயண் கல்சங்ரா, ஷியாம்லால் சாஹு மற்றும் பிரவீன் தகால்கி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் 3 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

Google+ Linkedin Youtube