நடிகை பார்வதி புகாரின் பேரில் ஒருவர் கைது

கொச்சி,

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை பார்வதி, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.  மேலும், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த "கசாபா' திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் வெறுப்பு  உரையாடல்களை அவர் கடுமையாக விமர்சித்தார். 

இதையடுத்து, நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மம்முட்டியின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

சகித்துக்கொள்ள முடியாத அளவில் சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் வந்தன. அதை தொடர்ந்து தற்போது பார்வதி போலீசில் புகார் செய்து உள்ளார்.

மாநில டிஜிபி  லோக்நாத் பெக்ராவிடம் பார்வதி  புகார் அளித்து உள்ளார். இது குறித்து கேரள சைபர்  போலீஸ் விசாரணையை தொடங்கியது.  இதில், வடக்கன்சேரி பகுதியை சேர்ந்த பிரின்டோ என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவர் என போலீசார் கூறியுள்ளனர்.

Google+LinkedinYoutube