பஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி சரத்குமார் சைக்கிளில் வந்து போராட்டம்

சென்னை

பேருந்து கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து சென்னை, சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார், சைக்கிளில் போராட்ட இடத்துக்கு வந்தார். இதன் பின்னர், பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை கண்டித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவுபடும் சூழல் உருவாகியுள்ளது.  காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு என்ன? தமிழகத்திற்கு ஆதரவா? கர்நாடகத்திற்கு ஆதரவா? . ரஜினி காட்டுவது பாபா முத்திரை கிடையாது, ஆட்டுத்தலை அது ரகசிய குறியீடு. தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயந்து ஓடியவர் ரஜினி.  இவ்வாறு அவர் கூறினார்

கடந்த 19 ஆம் பேருந்து கட்டணம் இரண்டு மடங்காக தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சி நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று மதியம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Google+ Linkedin Youtube