தொழில் அதிபர் பாலியல் தொல்லை தருவதாக பிரபல கவர்ச்சி நடிகை புகார்

மும்பை

பிரபல மூத்த பாலிவுட் நடிகை ஜீனத் அமன்.   1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராகி பின் மிஸ் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றவர்.  இந்தித் திரைப்பட உலகிற்கு மேற்கத்திய கதாநாயகிகளின் தோற்ற அமைப்பை அறிமுகப்படுத்தி நிலையான தாக்கத்தை உண்டாக்கியவர். பாலிவுட்டின் கவர்ச்சிச்  நடிகையில் முன்னணியானவர்.   இவர்  தற்போது  தொழிலதிபர் அமர் கன்னாவுக்கு எதிராக   ஒரு பாலியல்  புகார் அளித்து  உள்ளார்.இதனையடுத்து போலீஸார் பெண்ணை பின் தொடர்தல் (சட்டப்பிரிவு 304 டி), பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் (சட்டப்பிரிவி 509) ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, "ஜீனத் அமனுக்கும் அவர் புகார் கொடுத்துள்ள தொழிலதிபருக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்துள்ளது. ஆனால், நட்பு கசந்துபோகவே ஜீனத் அவரிடமிருந்து விலகியுள்ளார். ஆனால், அந்த தொழிலதிபரோ தொடர்ந்து ஜீனத்துக்கு தொலைபேசி வாயிலாக துன்புறுத்தல் அளித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே ஜீனத் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம், ஹீரா பன்னா, யாதோங்கி  கி பராத், டான் மற்றும் பலர்  வெற்றி திரைப்படங்களில் நடித்து  புகழ் பெற்றவர் ஜீனத் அமன்.

Veteran actor Zeenat Aman files a complaint of stalking and criminal intimidation against a businessman in Mumbai. Police begin investigation,the businessman is absconding

— ANI (@ANI) 29 January 2018

Google+ Linkedin Youtube