வேலியே பயிரை மேய்ந்த கதை; குடிபோதையில் வாகனங்கள் மீது இன்ஸ்பெக்டர் மோதல்

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மெட்சல் பகுதியில் காவல் பயிற்சி மையம் ஒன்றில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கிரிஷ் ராவ் (வயது 51).

இந்த நிலையில், யாப்ரல் பகுதியில் வாகனம் ஒன்றை ஓட்டி சென்ற அவர் சில வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.  இதனை தொடர்ந்து அவருக்கு சுவாச ஆய்வு பரிசோதனை நடந்தது.  இதில் அவரது ரத்தத்தில் அளவுக்கு மீறி ஆல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுபற்றி காவல் ஆணையாளர் மகேஷ் கூறும்பொழுது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ராவ், வேகமுடன் சென்று ஸ்கூட்டர் மற்றும் வேறு 2 வாகனங்கள் மீது மோதியுள்ளார்.  இதில் ஸ்கூட்டரில் பயணித்த 2 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  ராவ் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டிய காவலரே இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.

Google+ Linkedin Youtube