மனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி

பெருநாட்டின் குவரஸ் நகரத்தில் நபர் ஒருவர் குளிக்கச் சென்ற போது, அங்கிருந்த எலி ஒன்று பாத்ரூம் சிங்கில் நுரையால் ஆன தண்ணீரில் மனிதர்களைப் போன்றே குளித்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதை வீடியோவாக எடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது வரை இந்த வீடியோவை 37 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

குறித்த வீடியோவை எடுத்த ஜோஸ் கோர்யா கூறுகையில், நான் வழக்கம் போல குளிக்கச் சென்றேன். அப்போது பாத்ரூம் சிங்கில் எலி ஒன்று மனிதர்களைப் போன்று சோப்பு நுரையை தேய்த்துக் கொண்டிருந்தது. இது பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்ததால், அதை விரட்டாமல் வீடியோவாக எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube