தோனியிடம் சமீபமாக காணாத பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்: மைக் ஹஸ்ஸி

நடப்பு ஐபிஎல் தொடர் தோனியின் பேட்டிங்கில் ஒரு புத்தெழுச்சி என்றே கூற வேண்டும். 10 போட்டிகளில் 360 ரன்கள், இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள், சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 166 என்று 36 வயதினிலே கலக்கி வருகிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

மைக் ஹஸ்சி தோனியின் இந்தப் பார்ம் பற்றி விதந்தோதிக் கூறியுள்ளார். அதுவும் அவர் ரன் எடுக்கும் விதங்கள் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.


விராட் கோலியும் தோனியைப் புகழ்ந்து பேசுகையில், “தோனியின் இந்தப் பேட்டிங் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம். அது குறித்து எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்” என்று கூறியிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் அறிவுரையாளர் மைக் ஹஸ்ஸி கூறும்போது, “எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர் அவர், மிக அருமையான விக்கெட் கீப்பர், நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்கில் அருமையான பார்மில் உள்ளார் தோனி.

கடந்த சில ஆண்டுகளில் அவரிடம் காணாத சிறந்த பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்” என்றார் மைக் ஹஸ்சி.

ஷேன் வாட்சனும், நான் எப்போது பார்ப்பதை விடவும் இப்போது தோனி பந்துகளை அருமையாக அடிக்கிறார். அனைத்து விக்கெட்டுகளிலும் அடிக்கிறார். அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் அடிக்கிறார். தோனியை மிக அருகேயிருந்து பார்ப்பது சிறப்பு வாய்ந்தது, என்றார் வாட்சன்.

Google+ Linkedin Youtube