இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

இந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமென சுதந்திரக் கட்சி அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த அரசாங்கம் மக்களுக்காக எதனையும் முன்னெடுக்கவில்லையென குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய அமைச்சரவை நாளை முதல் களத்தில் இறங்குமென்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்-,

தேசிய அரசாங்கத்துக்கு ஏற்றவாறு இரண்டு கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு தான் வேண்டுமென நாம் இங்கே கோருவது இல்லை.

எமக்கு வழங்கப்படும் எந்தவொரு அமைச்சுக்கூடாகவும் மக்களுக்கு சிறந்த சேவையை முன்னெடுப்பதனையே எமது கடமையாக கொண்டுள்ளோம்.அந்த வகையில் இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து அமைச்சரவை பதவிகள் தொடர்பிலும் நாம் திருப்தியடைகின்றோம்.இந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பாக இது இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும் என்றும் கூறினார்.

Google+ Linkedin Youtube