1100 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 1100 ஜிபி அளவு இலவச டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் தொடங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 2016 முதல் சோதனை தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள், தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது.

சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Google+LinkedinYoutube