தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மின்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்  அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. பின்னர் அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: தமிழகத்தில் இனி கோடை காலம் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் மின் வெட்டு இருக்காது. குறிப்பிட்ட பகுதியில் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் விழுந்தால் அதை சரிசெய்யும் நேரம் வரையிலும் மட்டுமே மின் தடை செய்யப்படும். தமிழகத்தில் ஒரேநாளில் மின் இணைப்பு அளிக்கும் திட்டத்தில் கடந்த 2017 ஜூலையில் தொடங்கி, இதுவரை 3 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Google+ Linkedin Youtube